Parasakthi: பராசக்தி படம் வேஸ்ட்!.. விஜய் ஃபேன்ஸ் அட்ராசிட்டி.. இது எங்க போய் முடியுமோ!..

முன்பெல்லாம் நடிகர்களிடம்தான் போட்டியும், பொறாமையும் இருந்தது. தற்போது அது கூட குறைந்துவிட்டது.. அல்லது இல்லாமல் கூட போய்விட்டது.. ஆனால் இப்போது ரசிகர்களிடம் போட்டியும், பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மிகவும் அதிக அளவில் வன்மம் உருவாகியிருக்கிறது.

தனக்கு பிடித்த நடிகரின் படம் மட்டுமே ஓடி அதிக வசூலை பெற வேண்டும்.. மற்ற நடிகர்களின் படங்கள் ஓடக்கூடாது என்கிற ஒரு மோசமான எண்ணம் இப்போதுள்ள இளம் சினிமா ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் விஜய் ரசிகர்கள் அஜித்தை திட்டுகிறார்கள்.. அஜித் ரசிகர்கள் விஜய் மோசமாக விமர்சிக்கிறார்கள்..

இதனால், விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் விஜய் ரசிகர்கள் ரஜினியை திட்ட துவங்கினார்கள். ரஜினி படம் வெளியானால் படம் முதல் காட்சி வெளியாவதற்கு முன்பு படம் பிளாப்… படம் மொக்கை.. டிசாஸ்டர் என ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் செய்கிறார்கள்.

விஜய் ரசிகர்கள் இதுவரை அஜித் ரசிகர்களிடமும், ரஜினி ரசிகர்களிடம் மட்டுமே சண்டை போட்டு வந்தனர். இப்போது அவர்களின் கோபம் சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பியிருக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக பராசக்தி படமும் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டதுதான் அதற்கு காரணம்.

இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்தும் விஜய் ரசிகர்களின் கோபம் தீரவில்லை. ஜனநாயகன் படம் சென்சாரில் சிக்கி வெளியாகாத நிலையில் பராசக்தி படம் இன்று காலை வெளியானது. இந்தியாவில் முதல் காட்சி காலை 9 மணிக்கு வெளியானது.

ஆனால் 8:30 மணிக்கு விஜய் ரசிகர்கள் இப்படத்துக்கு எதிராக நெகட்டிவ் கருத்துக்களை பரப்ப துவங்கி விட்டார்கள். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியான போது அந்த படத்தை பார்த்து விட்டு வெளிவந்த ரசிகர்கள் ‘படம் மொக்கை’.. ‘வேஸ்ட்’.. என சொன்ன வீடியோக்களை எடுத்து அதை பராசக்திக்கு சொன்னது போல் ஹேஷ்டேக் பதிவிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.