இன்று பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது பராசக்தி திரைப்படம். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம் உலகமெங்கும் ரிலீஸாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீலீலா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சிவாஜி கணேசன் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் பராசக்தி.
அந்த படத்தின் தலைப்பை இந்தப் படத்திற்கு வைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகவே கருதப்படுகிறது. ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். அந்த வரலாற்று சம்பவத்தை நியாபகப்படுத்தும் விதமாக இந்தப் படத்தை கையில் எடுத்துள்ளார் சுதா கொங்கரா. படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவிமோகன் நடித்துள்ளார். வில்லனாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார் என்றே கூறவேண்டும். சிவகார்த்திகேயனை விட ரவிமோகனின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. படம் வெளியானதிலிருந்தே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. படத்தை பார்க்க பல பிரபலங்கள் திரையரங்கிற்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பராசக்தி படத்தை விமர்சனம் செய்யும் போது சூர்யாவிற்கு ரசிகர்கள் சபாஷ் போட்டு வருகின்றனர். ஏனெனில் நல்ல வேளை பராசக்தி படத்தில் சூர்யா நடிக்க வில்லை என்பதுதான் அந்த சபாஷுக்கு காரணம். ஏனெனில் பராசக்தி படத்திற்கு முன் புறநானூறு என்ற தலைப்பில்தான் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலக அவருக்கு பதில் சிவகார்த்திகேயன் கமிட் ஆனார்.
ஹிந்தி திணிப்புனு சொல்லிட்டு அதில் காதலையும் சேர்க்க சில சமயம் அது ரசிகர்களை கடுப்பேத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இடைவேளைக்கு பிறகு கதையில் கொஞ்சம் ஆறுதல் ஏற்படுவதாகவும் இரண்டாம் பகுதிக்கு பிறகு வேகம் எடுக்கும் என்று நினைத்தால் அதன் பிறகும் கொஞ்சம் தொய்வு ஏற்படுவதாகவும் கூறி வருகிறார்கள்.
ரவிமோகன் தன்னை வில்லனாக காட்ட கஷ்டப்படுகிறார். ஜிவி பிரகாஷ் படத்தை காப்பாற்ற கஷ்டப்படுகிறார். சிவகார்த்திகேயனின் கேரக்டரை வலிமைப்படுத்து காப்பாற்ற அவரும் கஷ்டப்பட அதர்வா தன்னை போராட்டக்காரராக காட்டிக் கொள்ளவும் கஷ்டப்படுகிறார். மொத்தத்தில் ஹிந்தி திணிப்பு என்று கூறி அரசியல் திணிப்பை செய்துள்ள இந்தப் படத்தில் இருந்து சூர்யா தன்னை காப்பாற்றிக் கொண்டார். அவருக்கு சபாஷ் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.




