Parasakthi: 16 டிக்கெட் மட்டுமே புக்கிங!.. பராசக்தி ப்ரீமியர் ஷோ கேன்சல்!.. அடப்பாவமே!..

1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் பராசக்தி. இந்த திரைப்படத்தை சுதாகொங்கரா இயக்க சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலிலா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு அதன்பின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 9ம் தேதி ஜனநாயகம் வருவதால் இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் விளக்கமும் அளித்தார். ஆனாலும் அவர்களின் கோபம் தீரவில்லை.. ஒரு பக்கம் ஜனநாயகம் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் இதுவரை வெளியாகவில்லை.. அநேகமாக இந்த மாதம் இறுதியில் படம் வெளியாகலாம் என தெரிகிறது.

மறுபக்கம் இன்று காலை வெளியான பராசக்தி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது. தமிழர்கள் பெருமை கொள்ளும் படம்.. தமிழர்களின் தமிழ் உணர்வை பற்றி பேசும் படம்.. மொழிப்போர் தியாகிகள் பற்றி பேசும் படம்.. இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என சிலர் பாசிட்டிவாக சொல்கிறார்கள்.. இதையெல்லாம் யோசிக்காத சிலர் படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரம் மட்டுமே நன்றாக இருக்கிறது.. மற்றபடி படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை.. படம் போர்’ என நெகட்டிவாக சொல்கிறார்கள். வெளிநாட்டில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை எனத்தெரிகிறது.

பிரான்சில் ஒரு அரங்கை புக் செய்து அந்த தியேட்டரில் பராசக்தி படத்தின் ப்ரீமியர் ஷோவை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பே இது தொடர்பான விளம்பரத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், 95 இருக்கைகள் கொண்ட அந்த அரங்கில் 16 டிக்கெட்டுகள் மட்டுமே புக் ஆகியிருந்ததாம், எனவே 16 டிக்கெட்டுக்காக ஒரு பிரிமியர் ஷோ நடத்தமுடியாது என்பதால் மொத்த ஷோவையும் கேன்சல் செய்திருக்கிறார்கள் என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.