விஜய் நடித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாவதாக படக்குழு அறிவித்தது. விஜயின் கடைசி தேவைப்படும் என்பதால் இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தார்கள்.
ஆனால், இந்த் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. முதலில் சில மாற்றங்களை செய்யச்சொல்லி அதை படக்குழுவும் செய்து கொடுத்துவிட்டது. அப்போது யுஏ சான்றிதழ் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதன்பின் சான்றிதழை கொடுக்காமால், எதுவும் சொல்லாமல் 10 நாட்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள். கேட்டதற்கு மறு தணிக்கை செய்யவேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்.
ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்குங்கள் என உத்தரவிட்டார். ஆனால் அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அதில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்கப்பட்டு, வருகிற 21ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து ஜனநாயகன் திரைப்பட பொங்கலுக்கு வரவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனநாயகன் படத்திற்கு ஏன் சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு தணிக்கை வாரியம் முழுமையான காரணத்தை இதுவரை சொல்லவில்லை.. தணிக்கை துறை அதிகாரி ஒருவரே புகார் சொன்னார் என்றார்கள்.. அதன்பின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக காட்சி இருக்கிறது என்றார்கள்.. அதன்பின் ராணுவ இலச்சினை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என சொன்னார்கள்.. இப்படி புதிய காரணங்களை சொன்னார்கள்.
ஆனால், ஜனநாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பைஜாமா அணிந்த அரசியல்வாதி ஒருவரை கட்டிப்போட்டு சவுக்கால் அடித்து எச்சரிப்பது போல வரும் காட்சிதான் தணிக்கை அதிகாரிகளை கோபப்படுத்தியிருக்கிறது என சிலர் சொல்கிறார்கள்.




