நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து சான்ட்ரா எலிமினேட் ஆகி வெளியேறியிருக்கிறார். இன்னும் நான்கு போட்டியாளர்கள் இருக்கின்றனர். இவர்கள்தான் அடுத்த வாரம் நடக்கும் ஃபைனல் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நான்கு பேரில் யார் இந்த சீசனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இரண்டு வாரங்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு உள்ளே வந்திருக்கின்றனர். நேற்று சான்ட்ரா வெளியேறும் போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. இதற்கு முன் எத்தனையோ போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர்.
அவர்களுக்கு கொடுத்த ஒரு வருத்தத்தை கூட சான்ட்ராவுக்கு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் வீட்டிற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி சான்ட்ராவை ஒரு நடிப்பு இளவரசியாகத் தான் அனைவரும் பார்க்கின்றனர். அவரிடம் உண்மைத்தனம் இல்லை என்பது தான் ரசிகர்களிடம் இருக்கும் கருத்தாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரெட் கார்டு வாங்கி வெளியே போன கம்ருதீனுக்கு அமோக வரவேற்பு கொடுத்ததை ஒரு வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கம்ருதீனின் நண்பர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்று இருக்கின்றனர்.
அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கமிருதீனின் கையைப் பிடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் அண்ணா பாருவை விட்டுறாதீங்க எனக் கூற அதற்கு கம்ருதீன் ஐயோ அது அப்புறம் பாத்துக்கலாம் என சொல்லிவிட்டு அதை கடந்து விடுகிறார்.
இன்னொரு ரசிகர் அரோராவிடம் பேசாதீங்க அண்ணா என கூறுகிறார். ரெக்கார்ட் வாங்கி வெளியே போன பார்வதி ஆகட்டும் கம்ருதீன் ஆகட்டும் இருவரைப் பற்றியும் எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. இப்போது கம்ருதீனின் இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன.




