Rajini: அப்பவே ரெக்கார்டு பிரேக் செய்த ரஜினி! ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் போது நடந்த சம்பவம்

Published On: January 12, 2026
rajini
---Advertisement---

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு ரெக்கார்டை செய்து விடுகிறார். அது வசூல் ரீதியாக இருக்கட்டும் அல்லது விமர்சன ரீதியாக இருக்கட்டும் ரஜினியின் படங்கள் என்றாலே அது ஒரு தனி ஸ்பெஷல் தான். அவரைப் பற்றி சன் பிக்சர்ஸ் நிறுவனர் தயாநிதி மாறன் கூட மேடையில் பேசும் பொழுது அவர் ரெக்கார்ட் பிரேக்கர் கிடையாது ரெக்கார்ட் மேக்கர் என்று தான் அடிக்கடி கூறுவார்.

அப்படி ஏகப்பட்ட சாதனைகளை படைத்திருக்கிறார். இந்த வயதிலும் இன்னும் இந்த தமிழ் சினிமா முழுவதையும் ஒரே ஆளாக இருந்து ஆண்டு வருகிறார் என்பதுதான் உண்மை. இந்த நிலையில் நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் நடந்த சில சுவாரசியமான சம்பவத்தை பற்றி பிரபல இயக்குனர் ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆரம்ப காலங்களில் ரஜினியும் கமலும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கின்றனர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு தான் இருவரும் தனித்தனியாக நடிக்கலாம் என்ற ஒரு முடிவு எடுத்தனர். அப்படி இருவரும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வெற்றியை ருசித்த திரைப்படம் நினைத்தாலே இனிக்கும். வெளிநாட்டில் அந்த படம் படமாக்கப்பட்டது. அதில் மொத்தம் 14 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக சம்போ சிவ சம்போ பாடலில் ரஜினியின் அந்த வெறித்தனமான பர்பாமன்ஸ் இன்றுவரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பர்பாமென்ஸ்.

ஆனால் அந்தப் பாடலில் முதலில் நடிக்க வேண்டியது கமல் தானாம். அதன் பிறகு கமலே ரஜினி நடித்தால்தான் நன்றாக இருக்கும். அவர் இந்த பாடலில் நடிக்கட்டும் என கூறியுள்ளார். அதன் பிறகு தான் அந்த பாடல் ரஜினியின் பாடலாக மாற்றப்பட்டிருக்கிறது. இன்னொரு பாடலும் அதில் உள்ளன. பாரதி கண்ணம்மா என தொடங்கும் அந்த பாடலை முழுவதுமாக படமாக்கியவர் கமல் என்று சொல்லப்படுகிறது.

அந்த நேரத்தில் இயக்குனர் பாலச்சந்தருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்த பாடலை மட்டும் கமல் படமாக்கினாராம். அந்த ஒரு பாடல் மட்டுமல்ல இதை வெளிநாட்டில் படமாக்கப்பட்டதால் ஒரு சில உதவியாளர்களை மட்டும் தான் பாலச்சந்தர் தன்னுடன் அழைத்துக் கொண்டு போனாராம். அதனால் பெரும்பாலும் கமல் தான் பாலச்சந்தருக்கு இந்த படத்தில் உதவியாளராக இருந்திருக்கிறார்.

இந்த படத்தின் போது கிட்டத்தட்ட 18 மணி நேரம் ரஜினி தூங்காமலேயே நடித்துக் கொடுத்தாராம். இதை அப்போதே பாலச்சந்தர் தொடர்ந்து 18 மணி நேரம் தூங்காமல் நடித்த ரஜினியின் இந்த ஒரு ரெக்கார்டு இதுதான் முதல் முறை என்று அப்பொழுதே கூறி இருக்கிறார். இந்த படத்தின் வெற்றி விழாவின் போது ரஜினியும் கமலும் கலந்து கொள்வதற்காக தேதி பிரச்சனையில் அந்த விழா தள்ளி போய்க்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் ரஜினி வந்தால் தான் கமல் வருவேன் என்றும் கமல் வந்தால்தான் ரஜினி வருவேன் என்றும் இருவரும் அப்போது இருந்தே நண்பர்களாக விட்டுக் கொடுக்காமல் இருந்து வந்ததாக அந்த இயக்குனர் கூறியுள்ளார்.