கடந்த 10 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பராசக்தி. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைக்கும் நூறாவது படம் இது.
அதனால் இது அவருக்கு ஒரு ஸ்பெஷலான படமாகவே கருதப்படுகிறது. நூறாவது படம் என்பதாலேயே இந்த படத்திற்கு அவர் மெனக்கிட்டு இருக்கிறார் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் அதையும் தாண்டி ஜிவி பிரகாஷின் இசை, பாடல், பிஜிஎம் என எல்லா வகையிலும் பின்னி பிடலெடுத்து இருக்கிறார் ஜீவி பிரகாஷ். சிவகார்த்திகேயனுக்கு இது 25 வது படம்.
இதற்கு முன் அமரன் திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. 25 வது படம் எனும் பொழுது அதையும் ஸ்பெஷலாக்க விரும்பினார் சிவகார்த்திகேயன். அதற்கு ஏற்ப சுதா கொங்கராவின் பராசக்தி படம் அவரை தேடி வர இதைவிட ஒரு சிறந்த படம் எனக்கு 25வது படமாக இருக்காது என்ற காரணத்தினால் இதை ஏற்றுக் கொண்டேன் என சிவகார்த்திகேயன் கூறினார்.
ஆனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தது வேறு மாதிரியாக இருந்தது. ட்ரைலரில் பார்க்கும் பொழுது படம் பெரிய அளவில் ஒரு புரட்சிகரமான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். படத்தில் சிவகார்த்திகேயனின் பங்கு என்பது மிகக் குறைவாகவே இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் மன்சூர் அலிகான் கூட இந்த படத்தை பெரிய அளவில் பாராட்டி இருக்கிறார்.

இந்த படத்தை கொடுத்த சுதா கொங்கராவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்றும் தெரிவித்திருக்கிறார். இன்றைய ஜென்சி கிட்ஸ்களுக்கு தெரிய வேண்டிய திரைப்படம். இதை கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அந்த தம்பி அதர்வா அந்த கால இளைஞனைப் போலவே சூப்பராக நடித்திருக்கிறார். அதை அப்படியே அவருடைய தோற்றத்தில் தெரிந்தது. கண்களிலும் அந்த புரட்சியை பார்க்க முடிந்தது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் தீனியே இல்லை என்றும் அவ்வப்போது வருகிற மாதிரி தான் அவருடைய கதாபாத்திரம் இருந்தது என்றும் தெரிவித்து இருக்கிறார். ரவி மோகன் கதாபாத்திரம் ஒரு புனையப்பட்ட கதாபாத்திரம் தான். அதை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் படம் மிக நன்றாக இருந்தது என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.



