சிம்பு போய்.. ரஜினி போய்.. SK போய்… அந்த ஹீரோக்கிட்ட போன பார்க்கிங் பட இயக்குனர்…

Published on: January 14, 2026
ramkumar
---Advertisement---

பார்க்கிங் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
அதன்பின் சிம்பு வைத்து ராம்குமார் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை.

ஒருபக்கம் ரஜினியின் 173 வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதையடுத்து ரஜினி பலரிடமும் கதை கேட்டார். அதில் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை அவருக்கு பிடித்துப்போக அவரையே இயக்குனராக டிக்கெட் அடித்திருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் திடீர் திருப்பமாக ரஜினியின் 173வது படத்தை இயக்குவது டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

எனவே சிவகார்த்திகேயனை சந்தித்து ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒரு கதை சொன்னார்.. அவருக்கு கதை பிடித்திருந்தாலும் கையில் சில படங்கள் இருப்பதால் தற்போது அவரால் நடிக்க முடியவில்லை. இந்நிலையில்தான் நடிகர் சூர்யாவெ ராம்குமார் பாலகிருஷ்ணனை அழைத்து பேசியதாக தெரிகிறது.

ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை சூர்யாக்கு பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், சூர்யாவுடன் ராம்குமார் படம் டேக்ஆப் ஆகுமா என்பது விரைவில் தெரிந்து விடும். கடந்த பல வருடங்களாகவே ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர்களு கூட படங்கள் அமைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.