பராசக்தி காத்து வாங்க இதுதான் காரணம்!.. விஜய் ஃபேன்ஸுக்கு தீனி போட்டாங்களே!…

Published on: January 14, 2026
parasakthi
---Advertisement---

1960களில் தமிழகத்தின் பல இடங்களிலும் நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இயக்குனர் சுதாகொங்காரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருந்தனர்.

ஜனநாயகனன் படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாகிறது என அறிவிப்பு வந்ததால் கோபப்பட்ட விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்டினார்கள். அதோடு, ஜனநாயகன் படம் வெளியாகவில்லை என்பதால் இன்னும் கோபமாக திட்ட துவங்கினார்கள். பராசக்தி படம் முதல் காட்சி வெளியாவதற்கு முன்பு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினார்கள்.

இதை சுதாகொங்கராவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்தார். விஜய் ரசிகர்களை ரவுடிகள், குண்டர்கள் எனவும் அவர் விமர்சித்தார்.
ஒரு பக்கம் பராசக்தி படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.. போரடிக்கிறது.. பல தியேட்டர்கள் காலியாக கிடக்கிறது.. வசூலே இல்லை.. தயாரிப்பாளர் போலியான வசூலை சொல்லி வருகிறார்.. என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

பராசக்தி திரைப்படத்தை தமிழ்நாட்டில் முதலில் 450 தியேட்டர்களில் மட்டுமே திரையிட்டிருக்கிறார்கள். ஆனால் ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனதால் மேலும் 100 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது..

ஆனால் விஜய், அஜித், ரஜினி அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு மார்க்கெட் இல்லை என்பதால் இரண்டாவதாக திரையிட்ட அந்த 100 தியேட்டர்களில் மட்டுமே கூட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது. இதைத்தான் படத்திற்கு வசூலே இல்லை.. படத்திற்கு கூட்டமே இல்லை என்பது போல விஜய் ரசிகர்கள் சித்தரிக்கிறார்கள் என்கிற படக்குழு.