இந்த பொங்கல் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமான கோலாகலமான பொங்கலாக இருந்திருக்க வேண்டியது. ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அது சம்பந்தமான வழக்கும் தற்போது நடந்து வருகின்றது. நாளை இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் கரூரில் நடந்த அந்த பெரும் துயரத்தை வைத்து விஜயிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று கடந்த மூன்று மணி நேரமாக தொடர்ந்து விஜயிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் ஜனநாயகன் ரிலீஸ் குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
ஜனநாயகன் எப்பொழுது ரிலீஸ் ஆனாலும் கண்டிப்பாக வசூலை அள்ளும். அதுவும் நாளை சென்சார் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. அது படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்தால் கண்டிப்பாக இந்த மாதம் இறுதியில் படம் ரிலீஸ் ஆகலாம். அடுத்த மாதம் கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதியை அறிவித்து விடுவார்கள்.
ஒரு வேளை ஜனநாயகன் ரிலீஸ் இந்த மாத கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரம் ரிலீஸ் ஆனால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதைவிட்டு பிப்ரவரி மாத கடைசியில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டால் மார்ச் முதல் வாரத்தில் எலக்சன் தேதியை அறிவித்து விடுவார்கள். அப்படி அறிவித்து விட்டால் ஜனநாயகன் படத்தை நிறுத்தி விடுவார்கள். அதுதான் தேர்தல் கமிட்டியின் விதிமுறை.
அதனால் எப்படியும் இந்த மாத கடைசி அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. அதுவும் எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களும் இந்த இடைப்பட்ட காலத்தில் வெளியாக வாய்ப்பில்லை. ஜனநாயகன் படம் மட்டும்தான் இருக்கிறது. பொங்கல் ரிலீஸ் ஆக அது வெளியாகி இருந்தால் 500 திரையரங்குகள் தான் கிடைத்திருக்கும்.
ஆனால் இப்போது ரிலீஸானால் கண்டிப்பாக ஆயிரம் திரையரங்குகள் கிடைக்கும். ஏனெனில் ஜனநாயகன் திரைப்படம் சோலோவாகத்தான் ரிலீஸ் ஆகும். இதனுடன் எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களும் போட்டியிட வாய்ப்பு இல்லை. அதனால் நல்ல ஒரு முடிவை எதிர்பார்த்து காத்திருப்போம் என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.




