சுந்தர் சி – விஷால் கூட்டணியில் புருஷன்!.. அசத்தலான டைட்டில் புரமோ வீடியோ!…

Published on: January 21, 2026
purushan
---Advertisement---

விஷாலும் சுந்தர்.சி-யும் இணைந்து ஏற்கனவே மத கஜ ராஜா, ஆம்பள போன்ற படங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். மத கஜ ராஜா திரைப்படம் வெளியானதும் எங்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகும் சுந்தர்.சி அறிவித்தார்.

ஆனால் பல மாதங்களாகியும் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில்தான் அந்த படம் தற்போது டேக்ஆப் ஆகியிருக்கிறது. இந்த படத்திற்கு புருஷன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார்.

நேற்று இந்த டைட்டில் புரமோ தொடர்பன ஒரு சிறிய வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில் புரமோ வீடியோவை பார்க்க ஹிப்ஹாப் தமிழா ஆர்வமுடன் இருப்பது போல காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான், புருஷன் படத்தின் டைட்டில் புரமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். வீட்டில் மனைவி தமன்னாவுக்கு அடங்கி வீட்டு வேலைகள் செய்யும் கணவராக விஷால் இருக்கிறார். ஆனால் அதே வீட்டுக்குள் வரும் ரவுடிகளை போட்டு பொளக்கிறார். அதை பார்த்து வீட்டுக்குவரும் சீரியல் நடிகர் யோகி பாபு அதிர்ச்சி அடைவது போல புரமோ வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள். புரமோ வீடியோ படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.