Homelatest newsJananayagan: ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்! ‘ஜனநாயகன்’ ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்

Jananayagan: ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்! ‘ஜனநாயகன்’ ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் தற்போது தணிக்கை குழுவின் மறு ஆய்விற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் படம் கூடிய சீக்கிரம் வெளியாவதற்கு வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சமூகமும் அரசியலும் ஒன்றுக்கொன்று கலந்து ஒரு சாதாரண மனிதனின் குரலாக எழுந்து நிற்கும் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் வழக்கமாக நடிக்கும் அந்த மாஸ் ஆக்சன் காட்சிகளை விட மக்களுக்கு அவர்களுடைய பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு சமூகப் பொறுப்புள்ள மனிதராக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதனால் அரசியல் சார்ந்த காட்சிகள் வசனங்கள் பெரிய அளவில் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல விஜயின் கதாபாத்திரம் இந்த படத்தில் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் எழுச்சியை காட்டும் காட்சிகளில் விஜயின் கதாபாத்திரம் பெரிய அளவில் ஓங்கி நிற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களுக்கான படமாக இல்லாமல் ஒட்டுமொத்த ஜனநாயக மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் வரும் சில வசனங்கள் தற்போது ஆட்சி அமைக்கும் ஆட்சியாளர்களை மறைமுகமாக விமர்சிப்பதாகவும் தற்போதைய அரசியல் சூழலை நினைவுபடுத்துவதாகவும் இருப்பதால் அதில் சில வசனங்கள் காட்சிகள் மாற்றம் செய்ய வேண்டும் என சென்சார் குழு பரிந்துரை செய்திருந்தது.

அதற்கு ஏற்ப படக்குழுவும் அவர்கள் சொன்ன மாற்றங்களை எல்லாம் செய்து மீண்டும் சென்சாருக்கு அனுப்பினார்கள். ஆனால் சென்சார் தரப்பிலிருந்து சான்றிதழ் கொடுப்பதில் தாமதப்படுத்த நேரடியாக படக்குழு நீதிமன்றத்தை நாடியது. அங்கு ஏற்பட்ட பிரச்சனை தான் இப்போது வரை படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது. இது ஒரு ஈகோ பிரச்சனையாகவே மாறியது.

படக்குழுவுக்கும் சென்சாருக்கும் இடையே ஒரு ஈகோவை ஏற்படுத்தியது. அதனால் உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என மாறி மாறி இது சம்பந்தப்பட்ட வழக்கு நடந்து வந்தது. கடைசியில் உயர்நீதிமன்றம் மறுபடியும் இந்த படத்தை சென்சருக்கு அனுப்ப பரிந்துரை செய்தது. இப்போது தணிக்கை குழு இந்த படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப பரிந்துரை செய்திருக்கிறது. அதை படக் குழுவும் ஏற்று இருக்கிறது. அதனால் இது மட்டும் சரியாக நடந்தால் பிப்ரவரி 20ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments