
நடிகர் வடிவேலு சினிமாவில் சரியான வாய்ப்பில்லாமல் தவித்தபோது தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து அவரை தூக்கி விட்டவர்தான் விஜயகாந்த். சின்னக் கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க கவுண்டமணி சம்மதிக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் சிபாரிசில் வடிவேலுவுக்கு ஒரு வேடம் கிடைத்தது.
அதோடு போடுவதற்கு சட்டை, வேஷ்டிகளையும் வடிவேலுவுக்கு விஜயகாந்த் வாங்கி கொடுத்ததாக நடிகர் மீசை ராஜேந்திரன் சொல்லியிருந்தார்.
வடிவேலு எப்போதும் தன்னை தூக்கிவிட்டவர்களை நினைத்து பார்த்ததில்லை. அவர்களை மதித்ததும் இல்லை. கொஞ்சமும் நன்றி உணர்வே இல்லாதவர்தான் வடிவேலு. அதோடு, யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார். தன்னுடன் பல படங்களில் நடித்த சில காமெடி நடிகர்கர் இறக்கும் தருவாயிலும் வடிவேலு எந்த ஒரு உதவியும் செய்ததில்லை. அதுதான் வடிவேலுவின் குணம்..
வடிவேலு ஒரு நல்ல சிறந்த நகைச்சுவு நடிகர்.. ஆனால், நிஜவாழ்வில் அவர் ஒரு வில்லன் என்றுதான் கோலிவுட்டில் சொல்வார்கள். விஜயகாந்த் மீது தனக்கிருந்த தனிப்பட்ட வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்காக 2011 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போனார் வடிவேலு..
தமிழகத்தில் பல ஊர்களுக்கும் போய் விஜயகாந்தை இஷ்டத்துக்கும் திட்டினார். ‘விஜயகாந்த் ஒரு குடிகாரன்.. அவன் உளறிக் கொண்டே இருப்பான்.. அவனுக்கு எதுவும் தெரியாது’ என்றெல்லாம் ஒருமையில் பேசினார்.. ஆனால் அந்த தேர்தலில் விஜயகாந்த் 29 தொகுதிகள் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்..

இந்நிலையில், விஜயகாந்தை திட்ட வடிவேலுவுக்கு 5 கோடி சம்பளம் கொடுத்தது திமுக. அந்த மேடையில் கலைஞர் கருணாநிதியும் இருந்தார் என நடிகர் தியாகு சொன்னதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் தற்போது பேசி வருகிறார்கள்.. குறிப்பாக கேப்டன் இமேஜை சிதைக்க திட்டமிட்டவர்களிடமே பிரேமலதா கையேந்துவதை தேமுதிகவின் உண்மையான தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது..