
இந்த வாரம் (மார்ச் 3 – மார்ச் 9, 2026) ஓடிடி தளங்களில் வெளியாகப்போகும் சுவாரசியமான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்த தகவல்கள் இதோ:
With Love : அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான இந்த ரொமாண்டிக் காமெடி படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. பள்ளிப் பருவத்தில் காதலித்த இருவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போது நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இப்படத்தின் கதை. திரையரங்குக்ளில் வெளியாகி ரூ. 35 கோடி வரை வசூல் செய்து சூபர் ஹிட்டான இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 6ம் தேதி வெளியாகிறது.
Dheeram : இது ஒரு விறுவிறுப்பான ஆக்சன் த்ரில்லர் திரைப்படம். கலிகட்டில் நடக்கும் தொடர் கொலைகளைத் துப்பறியும் ஒரு துப்பறியும் அதிகாரியைச் சுற்றியே கதை நகர்கிறது. திவ்யா பிள்ளை, அஜு வர்கீஸ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளனர். ச்ன் நெக்ஸ் தளத்த்தில் வருகிற 6ம் தேதி ஸ்ட்ரீமிங் ஆகிறது.
Gandhi Talks : விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஒரு மௌனத் திரைப்படம் (Silent Film). கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கிய இந்தப் படத்தில் அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற 6ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
Subedaar: அனில் கபூர் நடித்துள்ள இந்த ஆக்சன் டிராமா படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராகப் போராடும் ஒரு ஓய்வுபெற்ற சுபேதாரின் வீரமிக்க பயணமே இப்படத்தின் கதை. அமேசான் பிரைமில் நாளை மறு நாள் அதாவது 5ம் தேதி வெளியாகிறது.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com
