
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சக்காரன் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.
இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 மார்ச் 4 அன்று வெளியான படம் பிச்சைக்காரன்.
ஒரு கோடீஸ்வரன் தனது தாயின் உயிரைக் காப்பாற்ற, சாமியார் சொன்ன வார்த்தையை ஏற்று 48 நாட்கள் தன்னை யார் என்று காட்டிகொள்ளாமல் பிச்சைக்காரனாக வாழும் கதை. தமிழ் சினிமாவில் அம்மா செண்டிமென்ட் என்பது காலம் காலமாக இருந்தாலும் இந்த படத்தில் கொஞ்சம் வித்யாசமாக சசி யோசித்திருந்தார். அதுவே இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.
இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனிக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் இப்படம், சூபப்ர்ஹிட் ஆனது. இப்படத்தில் இடம்பெற்ற நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னப்போல ஆகுமா என்ற பாடல், இன்றும் அன்னையர் தினத்தின் தேசிய கீதமாக பார்க்கப்படுகிறது. இசை விஜய் ஆண்டனியே அமைத்திருந்தார்.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com


