
சினிமா உலகில் பெரும்பாலானோருக்கு உண்மையான பெயர் இருக்காது.. இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நடிகர், நடிகைகள் திரைப்படங்களில் அறிமுகமாகும்போது பெயரை மாற்றி விடுவார்கள். பாரதிராஜாவெல்லாம் தனது படங்களின் நடித்த எல்லா நடிகர், நடிகைகளின் பெயர்களையும் மாற்றி விட்டார்.. தற்போது அவர் வைத்த பெயர்களில்தான் அந்த நடிகைகள் ரசிகர்களால் அறியப்படுகிறார்கள். ரஜினிக்கு கூட அத ஒரு சொந்த பெயர் கிடையாது..
அதேநேரம் சிலருக்கு பெயர் தானாக அமைந்து விடும்.. அப்படி ஒருவர்தான் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன். இவர் கே.பாக்யராஜுடன் கல்லூரியில் படித்தவர்.. இருவரும் ஒன்றாகவே சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடியவர்கள். பாக்யராஜ் பாரதிராஜாவிடம் சேர்ந்து நடிகர், இயக்குனர் என வளர்ந்தார்.
ஆர்.சுந்தர்ராஜன் பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தால், குங்குமச்சிமிழ், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானார். விஜயகாந்தை வைத்து 5 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறி பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்..

இந்நிலையில்தான், சமீபத்தில் ஆர்.சுந்தர்ராஜன் அளித்த பேட்டியில் ‘சுந்தர்ராஜான் என்கிற பெயர் உங்களுக்கு எப்படி வந்தது?’ என்ற கேள்விக்கு பதில் சொன்ன அவர் ‘நான் பிறந்தது 1950.. அப்போது தமிழ்நாடு முழுவதும் காலரா நோய் அதிக அளவில் இருந்து பலரும் உயிரிழந்தனர். அப்போது முதலமைச்சராக காமராஜர் இருந்தார்.. மக்கள் எலிக்கறி சாப்பிட்ட காலம் அது. ரேஷனில் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை கொடுப்பார்கள்.. அப்போது ரேஷன் கடைகளில் கணக்கு எடுத்தார்கள். .
அப்போது நான் 6 மாத கைக்குழந்தை.. என் அம்மா என்னை மடியில் தூக்கிக் கொண்டு ரேஷன் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அதிகாரி அவரிடம் என் அப்பா, அண்ணன், என் அம்மா ஆகியோரின் பெயர்களை கேட்டு எழுதிவிட்டு மடியில் இருந்த என்னை பார்த்து ‘இவன் பெயர் என்ன?’ என்று கேட்டார்.. ‘இவனுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை’ என என் அம்மா சொல்ல ‘எப்படி உங்களுக்கு ரேஷன் கார்டு கொடுப்பது?’ என அவருக்கும் என் அம்மாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தி, மொட்டை அடித்துதான் என் பிள்ளைக்கு பெயர் வைப்பேன்.. உங்கள் ரேஷனே எனக்கு தேவையில்லை என்று என் அம்மா சண்டை போட்டார். அதன்பின், அந்த அதிகாரியே ஒரு ஐடியே கொடுத்தார். ‘
இப்போதைக்கு இவனின் பெயர் சுந்தர்ராஜன் என எழுதிக் கொள்கிறேன்.. உங்கள் வீட்டில் யாராவது வந்து கேட்டால் இவன் பெயர் அதுதான் என்று மட்டும் சொல்லுங்கள்’ என்று சொன்னார்.. அதுவே என் பெயராக மாறிவிட்டது’ என சொல்லியிருக்கிறார்.

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com


