
பராசக்தி படத்திற்கு பின் தாய் கிழவி திரைப்படத்தை இயக்கியுள்ள சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சேயோன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு போஸ்டருடன் வெளியானது.
சிவக்குமார் முருகேசன் இயக்கிய தாய் கிழவி படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே புரடெக்ஷன் சார்பில் வெளியிட்டார். இந்த படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்திருக்கிறது. அதோடு, படத்தை பலரும் சிலாகித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக இப்படத்தை பார்த்த கமல் ராதிகாவையும், சிவக்குமார் முருகேசனையும் மிகவும் பாராட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில், சேயோன் படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு 10 கோடி மட்டுமே முன்பணமாக கொடுத்திருக்கிறார் கமல். மொத்தமாக 35 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். மேலும் படத்தின் லாபத்தில் 70 சதவீதம் சிவகார்த்திகேயனுக்கு என்று பேசியிருக்கிறார்களாம். மீதமுள்ள 30 சதவீத லாபம்தான் ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு என்கிறார்கள்.
சேயோன் படத்திற்கு 120 கோடி அளவுக்கு வியாபாரம் இருக்கிறது என்கிறார்கள்.. அப்படி பார்த்தால் சிவகார்த்திகேயனுக்கு 60 கோடி வரை வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. சிவகார்த்திகேயனின் முந்தையை இரண்டு படங்களான மதராஸி மற்றும் பராசக்தி ஆகியவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே சேயோன் ஹிட் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் முக்கியம். சேயோன் வியாபாரத்திற்கு தாய் கிழவியின் வசூல் மிகவும் முக்கியம். அதனால்தான் தாய் கிழவி படத்திற்கு பறந்து பறந்து புரமோஷன் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அது அவருக்கு கை கொடுத்திருக்கிறது.

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com


