சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே விஜய்யுடன் நடிகை திரிஷாவும் எதை பற்றியும் கவலைபடாமல் ஒரே கலரில் உடை அணிந்துகொண்டு ஜோடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது. தவெக கட்சிகாரர்கள் கூட இதை ரசிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஒரு விழாவில் திரிஷா பற்றி பேசுகையில், ‘குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது. அவங்க வெளியே வந்தால் பிரச்னைகள் வருகின்றன என கூறியிருந்தார். ஆனால் அவ்ர் பேசிய அந்த காட்சியை யாரோ ஒருவர் செல்பொனில் ந்ருத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தார்.
பார்த்திபனின் அந்த பேச்சுக்கு திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், எனது பெயரையும், புகைப்படத்தையும் காட்டப்போவதாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறினார். உதவியாளர் மூலம் அந்த கோரிக்கை வந்தது. கடைசி நேரத்தில் எனது பெயரும், புகைப்படமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மைக்கில் ஒரு கருத்தினை கூறுவதால் அது புத்திசாலித்தனமானதாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாறிவிடாது. அது முட்டாள்த்தனமாக பேசப்படுவதை இன்னும் அதிகம் கேட்க செய்யும். அறிவு இல்லாமல் மரியாதையில்லாமல் வார்த்தைகளை பேசுவது, அந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவர்களது குண நலனை காட்டாது. பேசுபவரின் குணநலனையே காட்டும் என்று கோபமாக கூறியிருந்தார்.
இதையடுத்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் அவர் கூறியபோது எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது இதில். வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டு குரல் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ‘சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி நிறைவேறிவிடுகின்றன. அந்த நிகழ்ச்சியில் ரேப்பிட் ஃபயர் போல கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னபோது; திரிஷாவின் புகைப்படத்தை காண்பித்தார்கள். என்ன சொல்லலாம் என யோசிக்கையில் குந்தவை குந்த வை என குரல் எழுப்பினார்கள். உடனே வார்த்தை ஜாலத்துக்காக மட்டுமே குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்கவும்; பிரச்னை வராமல் இருக்க என கூற; அரங்கமே கை தட்டியது. பெரும்பாலும் விஜய் ரசிகர்கள். நான் பேசியது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். வருத்தத்தை பதிவு செய்துகொள்கிறேன் என கூறியிருந்தார்.
ஆனால் சமூகவலைதலங்களில் பலரும் அவர் வருத்தமே தெரிவித்திருக்க கூடாது என பதிவிட ஆரம்பித்தார்கள். இந்நிலையில் திரிஷா குறித்து பேசி மீண்டும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “ஒரு நிகழ்ச்சியில் நான் விஜய், அஜித் பற்றி பேசுகையில் ஒரு ஃபோட்டோ வந்தது. அதை பார்த்ததும் என்ன பேசுவதென தெரியமால் திகைத்துவிட்டேன். நான் திட்டமிட்டு அவர் ஃபோட்டோவை போட்டு பேச வேண்டுமென ஆசைப்பட்டேன் என சொல்வது பொய். அப்படி நான் பணம் வாங்கிக்கொண்டு எந்த நிகழ்ச்சிக்கும் செல்லமாட்டேன். தவறும் செய்யமாட்டேன். எனது ஆதங்கம் அது திரிஷா வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என அந்தணன் உள்ளிட்டோர் சொன்னார்கள். கரூர் பிரச்னையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தன. இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இவ்வளவு பாதிப்புக்கும் காரணமான பெண்மணி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அடி மனதில் இருந்தது. ஆனால் அதை சொல்வதற்காக அந்த மேடைக்கு நான் செல்லவில்லை. இவங்க ஃபோட்டோவை போட்டு பேச வேண்டும் என்பது எனது லட்சியம் இல்லை. இவங்க வீட்டிலேயே இருந்திருக்கலாம் என நான் சொன்னது ஆதங்கம். சமுத்திரகனியும் மிகுந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் பேசினார்.
நான் பிரச்னைகளை எப்போதும் விரும்பாதவன். அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். ஆனால் வேறு வழியில் ரிலீஸ் ஆகிவிட்டது. நான் ஒரு மூன்றாவது மனுஷியை பற்றித்தான் பேசினேன். ஆனால் இதை பெண்களுக்கு எதிராக பேசியதாக கூறுகிறார்கள். அது எனக்கு ஒரு மாதிரி கஷ்டம் ஆகிவிட்டது. நான் வருத்தம் தெரிவித்தது ரொம்ப சின்சியராகத்தான் தெரிவித்திருந்தேன். இப்படி ஒரு ட்வீட் வரப்போகிறது என தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன். மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தரமான ட்வீட்டால்தான் இதை பேசுகிறேன். அவரை பற்றி பொதுவெளியில் எக்கச்சக்கமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை. எனக்கு மட்டும் சொல்கிறார். நீங்கள் ஏன் வருத்தம் தெரிவித்தீர்கள் என என்னிடம் கண்டனம் தெரிவித்தவர்களும் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நன்றி. நீங்கள் நன்மைக்கு பக்கத்தில் நிற்கவில்லை. உண்மைக்கு பக்கத்தில் நிற்கிறீர்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com





