Cinema History

காதலிக்க நேரமில்லை படத்தில் அசத்தலான அறிமுகம்… ஸ்ரீதர் கேட்டும் பதில் சொல்லாமல் போன காஞ்சனா!

நடிகை காஞ்சனா காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னால நாடகத்தில் நடிப்பதற்கு அவர் வாய்ப்பு பெற்றார் என்பது பலருக்கும் தெரியாது. காஞ்சனாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் நந்தினி. அவரது சகோதரருக்கு நாடகக்காவலர் ஆர்எஸ்.மனோகரை ரொம்ப நல்லா தெரியும். அதன்காரணமாக அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு காஞ்சனாவுக்கு கிடைத்தது. அப்போது இலங்கேஸ்வரன் நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்த மனோகருக்கு அந்த நாடகத்தில் சீதையாக காஞ்சனா நடித்தால் நல்லாருக்கும் […]

நடிகை காஞ்சனா காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னால நாடகத்தில் நடிப்பதற்கு அவர் வாய்ப்பு பெற்றார் என்பது பலருக்கும் தெரியாது. காஞ்சனாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் நந்தினி. அவரது சகோதரருக்கு நாடகக்காவலர் ஆர்எஸ்.மனோகரை ரொம்ப நல்லா தெரியும். அதன்காரணமாக அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு காஞ்சனாவுக்கு கிடைத்தது.

அப்போது இலங்கேஸ்வரன் நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்த மனோகருக்கு அந்த நாடகத்தில் சீதையாக காஞ்சனா நடித்தால் நல்லாருக்கும் என்று எண்ணினார். அதைக் காஞ்சனாவிடம் சொன்னபோது, அவரும் எந்தவித தயக்கமும் இல்லாமல் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் அப்படி அந்த நாடகத்தில் நடித்து இருந்தது எல்லாம் அவரது அம்மாவுக்கு சுத்தமா பிடிக்கல. அவரது தாயார் தடைவிதித்த போதும் அதை எல்லாம் தாண்டி அந்த நாடகத்தில் நடித்தார் காஞ்சனா. நாடகத்தில் தீவிரமாக ஆர்வம் காட்டியதால பரீட்சையில அவரால பாஸ் ஆக முடியல.

அதுக்குப் பின்னால மீண்டும் படிக்கத் தொடங்கி அதில் தேர்ச்சி பெற்றார். படித்துக் கொண்டு இருந்த காலகட்டத்திலே ஆங்கிலத்தில மிக அழகாகப் பேசுவார் காஞ்சனா. அழகாக ஆங்கிலம் பேசுகின்ற காஞ்சனாவின் திறமையைக் கண்ட தோழி, விமானப் பணிப்பெண் வேலைக்கு நீ ஏன் விண்ணப்பிக்கக்கூடாது என்று ஆலோசனை சொன்னார்.

உடனடியாக அந்த வேலைக்கு விண்ணப்பித்தார் காஞ்சனா. விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் தான், இயக்குனர் ஸ்ரீதரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அந்தக் காலகட்டத்துல காதலிக்க நேரமில்லை படத்துக்காக கதாநாயகியைத் தீவிரமாகத் தேடிக் கொண்டு இருந்தார் ஸ்ரீதர். காஞ்சனாவைப் பார்த்தபோது அவரது அழகான தோற்றமும், ஆங்கிலத்தில் காஞ்சனா பேசிய விதமும் அவருக்கு ரொம்பவே பிடித்தது. என்னுடைய படத்தில் நடிக்கிறீர்களா என அவரைப் பார்த்து ஸ்ரீதர் கேட்டார். அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாமல், நேராக விமானத்துக்குள் ஓடிவிட்டார் காஞ்சனா.

அங்கு போய் தன் தோழிகிட்ட அவர் யார் என்று கேட்டார். அப்போதுதான் தன்னை நடிக்க அழைத்த இயக்குனர் யார் என்பது காஞ்சனாவுக்குத் தெரியவந்தது. யார் உன்னை அழைச்சிருக்கான்னு தெரியுமா? தமிழ்சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர். இது ஒரு பெரிய வாய்ப்பு. தயங்காமல் ஏற்றுக் கொள் என்று தோழி சொல்ல, அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் காஞ்சனா. அப்படித்தான் காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானார் காஞ்சனா.