இவன் புதுசு புதுசா என்னமோ பண்றாம்பா… நாகேஷைப் பற்றி பஞ்சு சொன்ன அந்த விஷயம்!
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நாகேஷ். அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்னாலேயே அவருடைய இயக்கத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு வந்தது. அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நாகேஷ் என்ன சொல்றாருன்னு பாருங்க. சர்வர் சுந்தரம் படத்தில் நடிக்கும்போது ரொம்ப வித்தியாசமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. மற்ற டைரக்டர்கள் மாதிரி இப்படி நடிங்க. அப்படி நடிங்கன்னு எல்லாம் எங்கிட்ட சொன்னதே இல்லை. காட்சி இப்படித்தான் இருக்கு. உங்களுக்கு எப்படி தோணுதோ, அப்படி […]
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நாகேஷ். அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்னாலேயே அவருடைய இயக்கத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு வந்தது. அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நாகேஷ் என்ன சொல்றாருன்னு பாருங்க.
சர்வர் சுந்தரம் படத்தில் நடிக்கும்போது ரொம்ப வித்தியாசமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. மற்ற டைரக்டர்கள் மாதிரி இப்படி நடிங்க. அப்படி நடிங்கன்னு எல்லாம் எங்கிட்ட சொன்னதே இல்லை. காட்சி இப்படித்தான் இருக்கு. உங்களுக்கு எப்படி தோணுதோ, அப்படி நடிங்க என்று என்னிடம் சொல்லி விடுவார்.
நான் நடிக்க நடிக்க அப்படி பாராட்டுவார். உனக்கு கற்பூர புத்தி நாகேஷ். ஒரு நகைச்சுவையை உங்கிட்ட சொன்ன உடனே, அதைக் கிரகிச்சிக்கிறது மட்டும் இல்லாம, உனக்கு என்னென்னவெல்லாம் தோணுதோ, அதை எல்லாம் சேர்த்து இம்ப்ரூவ் பண்ணி ரொம்ப அழகா நடிச்சிடுறே. உன்னை நடிக்க வைக்கிறது இருக்கே. அது சுலபமான வேலை என கிருஷ்ணன் பஞ்சு என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்.
சர்வர் சுந்தரம் படத்தின் படப்பிடிப்பின்போது தன்னுடைய ஒளிப்பதிவாளர் மாருதிராவை அழைத்த கிருஷ்ணன் பஞ்சு, இவன் புதுசு புதுசா என்னென்னமோ பண்றாம்பா. அதனால இவன் என்ன பண்றானோ, அதை எல்லாம் படம் பிடிச்சிடு. எது எது தேவையோ, அதைப் படத்துல பயன்படுத்திக்கலாம் என்று என்னிடம் சொன்னார். அந்தப் படத்துல அவளுக்கென்ன அழகிய முகம் என்றொரு பாடல் இடம்பெற்றிருந்ததை நீங்கள் அறிவீர்கள்.
அதுல பல மாதிரியா நான் நடந்துருப்பேன். அப்படி நான் நடந்ததுக்கு காரணம்னா அது கிருஷ்ணன் பஞ்சுதான். ஒரு ஸ்டைல்ல நடந்து காட்டுன உடனே, நான் சும்மா இருக்க மாட்டேன். சார் இப்படி நடந்து காட்டவா? அப்படி நடக்கவா? அப்படி நடக்கவான்னு தொடர்ந்து அவர்கிட்ட கேட்டுட்டு இருப்பேன். நான் எப்படி எப்படி எல்லாம் நடந்தேனோ, அதை எல்லாம் படமாக்கி கிருஷ்ணன் பஞ்சு அந்தப் படத்திலே இணைத்து படமாக்கி இருந்தார். அந்தப் பாடலில் எனக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது என்றால் அதற்கு முக்கியமான காரணம் கிருஷ்ணன் பஞ்சுதான் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் கிருஷ்ணன் பஞ்சு.