இனி அப்படி நடிக்க மாட்டேன் – அமலாபால்

தமிழ் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலா பால். முதல் படத்திலேயே அவரது நடிப்பில் அனைவரையும் பேச வைத்தது. அதனை தொடர்ந்து விக்டமுடன் தெய்வ திருமகள், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி , விஜயுடன் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

லோகேஷ் கனகராஜ் நண்பர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் அமல அபால் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் சமீபத்தில் இது பற்றி பேசிய அமலாபால், ஆடை படத்தில் நடித்தபோது அந்தக் கதைக்கு நிர்வாண காட்சிகள் தேவைப்பட்டதால் அப்போது அதில் நடித்தேன். அது மிகப்பெரிய ஆபத்தான இன்றைய சூழ் நிலையில் அல்லது தற்போது எனக்கு இருக்கும் பக்குவத்தில் அப்படிபட்ட காட்சிகளில் மீண்டும் நடிக்க முடியாது என்று அமலா பால் கூறினார்.