தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். அலட்டிக் கொள்ளாமல் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல், இமேஜ் பார்க்காமல், பன்ச் வசனம் பேசாமல், நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி. பல படங்களில் ஓரிரு காட்சிகளில் வரும் கேமியோ வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். மாஸ்டர், விக்ரம், ஜவஅன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து கலக்கியிருக்கிறார்..
தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் இஞ்சி வெல்லம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பது பற்றி பேசிய விஜய் சேதுபதி ‘மணி சார் இயக்கத்தில் ஒரு காதல் கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது பல வருட கனவு. ஏனெனில், மணி சார் காதலை காட்சிப்படுத்தும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.. காதலை அழகாகவும், ரசிக்கும்படியும் அவர் எடுப்பார்.. வாழ்க்கையில் ஒரு முறையாவது அவருடன் அப்படி ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என நான் விரும்பினேன்.. அது தற்போது நிறைவேறியிருக்கிறது..
என் வாழ்க்கையில் இது போல பல ஆச்சரியமான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும்.. மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டுக்கு சென்றது.. ஹிந்தி படத்தில் நடித்தது, மணி சார் படத்தில் நடிப்பது.. இப்படி எல்லாமே எதிர்பாராத விஷயங்கள்தன்.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என கூறியிருக்கிறார்..




