‘பேஷன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘தி ரூட்’ தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பிரபல இயக்குநரும், ‘டிசி’ ஹீரோவுமான லோகேஷ் கனகராஜ் அவரது ‘G Squad’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள புதிய படம் தான் ‘மிஸ்டர் பாரத்’.

அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகன் ஆக பாரத் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சம்யுக்தா விஸ்வநாதன் டூயட் பாடி ஆடியிருக்கிறார்.

மேலும், ஆதித்யா கதிர், நிதி பிரதீப், பால சரவணன், ஆர்.சுந்தர்ராஜன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு பிரணவ் முனிராஜ் தான் இசையமைத்திருக்கிறார்.

முதலில் இந்த படத்தை இன்று (அக்டோபர் 1-ஆம் தேதி) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, இதன் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.