அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடமாகியும் அவரின் அடுத்த படம் தற்போது வரை துவங்கப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள். அஜித்தின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என அறிவிப்பு வெளியானது.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அஜித் கேட்ட 185 கோடி சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. பல மாதங்கள் தயாரிப்பாளரை தேடியும் யாரும் கிடைக்கவில்லை. எனவே ஒரு கட்டத்தில் தானே அந்த படத்தை தயாரிப்பது என அஜித் முடிவெடுத்தார்..

இதையடுத்து, டேர் டெவில் என தலைப்பு வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது. ஒருபக்கம், இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க மோகன்லாலிடம் படக்குழு பேசி வந்தது. ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க அஜித் தரப்பு முன் வராததால் நடிக்க முடியாது அவர் கைவிரித்துவிட்டார்.

எனவே மலையாள நடிகர் உன்னி முகுந்தனிடம் தற்போது படக்குழு பேசி வருகிறதாம். இவர் ஏற்கனவே கருடன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். எல்லாம் சரியாக அமைந்தால் அவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது.

அதேபோல் மங்காத்தா படத்தில் நடித்தது போல டேர் டெவில் படத்திலும் அஜித்துக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என சொல்கிறார்கள். எனவே கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் செம ட்ரீட் வைத்திருக்கிறார் என்று கணிக்கப்படுகிறது…