latest news

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்… 2 படங்களில் நடிக்க ஓகே சொன்ன காந்தாரா ஹீரோ!

சிதம்பரம் இயக்கிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற மலையாள திரைப்படத்தின் வெற்றி, இயக்குநர் சிதம்பரத்துக்கு மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங்கை உருவாக்கித் தந்தது. இதை அடுத்து இவர் இயக்கிய படம் ‘பாலன் – தி பாய்’.

இப்படம் இந்த ஆண்டு (2026) ஜூன் மாதம் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளி வந்து விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

தற்போது, இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகப் போகும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஒரு படம் ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானராம். இதன் ஷூட்டிங் அடுத்த ஆண்டு (2027) துவங்கவுள்ளது. இதை பிரபல தயாரிப்பாளார் ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார்.

Author