">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அடுத்தவனின் எச்சி தட்டு, கழிவறை கழுவ செல்லமாட்டேன் – பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்!
வதந்திகளுக்கு லட்சுமி மேனன் காட்டம்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. இந்நிலையில் சமீப நாட்களாக வித விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனால் பிக்பாஸில் பங்கேற்க போகிறார் என வதந்திகள் எழுந்தது.
இது குறித்து பதிவிட்டுள்ள லட்சுமி மேனன், ” நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை. அத்துடன் மற்றவர்களின் எச்சி தட்டை கழுவவோ, அடுத்தவர்களின் கழிவறை கைகழுவவோ அங்கு ஒருபோதும் மாட்டேன். முக்கியமாக கேமராவுக்கு முன்னால் சண்டை போட மாட்டேன். எனவே பிக்பாஸ் என்ற குப்பை நிகழ்ச்சியில் செல்ல போகிறேன் என்று இனி யாரும் என்னிடம் கேட்காதீர்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.