Connect with us

Cinema News

ரிலீசுக்கு முன்பே 47 கோடி லாபம்.! பீஸ்ட் மொத்த பிசினஸ் ரிப்போர்ட் இதோ..,

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்க்க படும் திரைப்படம் என்றால் அது பீஸ்ட் தான். என்னதான் கே.ஜி.எப் -2 திரைப்படத்திற்கு பிரமாண்ட எதிர்பார்ப்பு இருந்தாலும்,  தமிழகத்தில் முன்னுரிமை பீஸ்ட் தான் என்பது, தியேட்டர் எண்ணிக்கையிலும், அதன் முன்பதிவிலும் தெரிந்து விடுகிறது.

 

இந்த திரைப்படத்தின் பட்ஜெட் , நடிகர்களின் சம்பளம் மற்றும் இப்படம் குறித்த வெளியீட்டு வியாபாரம் என பிரபல யூடியூப் சேனல் வலைப்பேச்சு மூலமாக நமக்கு கிடைத்த தகவலின் படி, பல கோடி  லாபத்தை ரீலீசுக்கு முன்பே பீஸ்ட் திரைப்படம் சன் பிக்ச்சர்ஸுக்கு கொடுத்துள்ளது.

இப்பாத்தின் பட்ஜெட் மட்டுமே 165 கோடியாக உள்ளது. அதில் சம்பளமாக மட்டுமே விஜய்க்கு 80 கோடி, இயக்குனர் நெல்சனுக்கு 8 கோடி, அனிருத்துக்கு 4 கோடி, ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு 2 கோடி, இயக்குனர் செல்வராகவனுக்கு 2 கோடி , ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸாவுக்கு 1.5 கோடி, மற்ற நடிகர்களுக்குள் சம்பளமாக 2.5 கோடி ரூபாய் என கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மீதமுள்ள 65 கோடியில் தான் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் எடுக்கப்பட்டுள்ளதாம். இதுபோக, விளம்பர செலவு, விநியோகிப்பதற்கான செலவு என இருக்கிறது.

சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது என்பதால், அந்நிறுவனமே , ரெட் ஜெயண்ட் மூலம்இணைந்து தமிழகத்தில் 800 தியேட்டரில் இப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் மட்டுமே 75 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதற்கடுத்து, கேரளாவில்  5.8 கோடி , கர்நாடக 6.30 கோடி என வியாபாரம் ஆகியுள்ளது. ஆந்திர மற்றும்  தெலுங்கானாவில் கே.ஜி.எப்-2வுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், விஜய் 66 தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை அம்மாநிலங்களில் வெளியிட உள்ளதாம். ஆதலால் இதன் மூலம் 6 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – ஊ ஊ சொல்லி ரசிகர்களை சூடாக்கிய ஆண்ட்ரியா.! போலீஸ் தடியடியுடன் தெறித்து ஓடியது தான் மிச்சம்.!

ஹிந்தியிலும் சன் பிக்ச்சர்ஸ்  அங்குள்ள நிறுவனத்துடன் இணைந்து வெளியிட உள்ளது. அதன் மூலம் 2 கோடி ஷேர் கிடைக்கும்.  வெளிநாட்டு தியேட்டர் உரிமம் 32 கோடிக்கு ஐங்கரன் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாம்.

மற்றபடி சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம், இசை உரிமம் என அனைத்தும் சன் பிக்ச்சர்ஸ் வசமே இருக்கும் என்பதால், அதனை மட்டும் 95 கோடி என வைத்துக்கொள்ளலாம். (சட்டலைட் 40 கோடி, டிஜிட்டல் 50 கோடி, ஆடியோ 5 கோடி ) மொத்தத்தில் சுமார் 222 கோடி பீஸ்ட் திரைப்படம் சன் பிக்ச்சர்ஸுக்கு திருப்பி கொடுத்துள்ளது. இதில்  சன் பிக்ச்சர்ஸ்க்கு பீஸ்ட் ரிலீசுக்கு முன்னரே, சுமார் 47 கோடி லாபம் கிடைத்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top