">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எந்த படத்துலமா இப்படி நடிச்சே?! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வாணி போஜன்…
எந்த படத்துலமா இப்படி நடிச்சே?! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வாணி போஜன்…
தொலைக்காட்சியில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின் ஜெய்க்கு ஜோடியாக ‘டிரிபிள்ஸ்’ என்கிற வெப் சீரியஸிலும் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார்.
ஒருபக்கம், அழகான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒல்லியான உடலில் தொளதொளவென ஜாக்கெட் அணிந்து வேலைக்காரி போல போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘எந்த படத்துலமா நீ இப்படி நடிச்சே?’ என ஷாக் ஆகியுள்ளனர்.