அசலே கஷ்டம்!.. இதுல எங்க வட்டிய எப்படி தர?!…ரெட் கார்டுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா!...
தொழில்நுட்பங்கள் வளர வளர சினிமாவில் அபரிமிதமான வளர்ச்சியையும் காண முடிகிறது. சினிமாவில் வளர்ச்சியை காணும் பொழுது அதற்கு ஏற்றாற் போல் அதில் நடிக்கும் நடிகர்களின் சம்பளங்களும் வளர தொடங்கின.
தமிழ் சினிமா நடிகர்களுக்கு சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்கள்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களுக்கென தனி சங்கமே உள்ளது. அதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கம் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்.இதன் தலைவராக முரளி ராமசாமி கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நடிகர் விஷால், மிஷ்கின் போன்றவர்களும் இதில் முக்கிய பதவியில் உள்ளனர். சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் அரங்கேறியது.
இதையும் வாசிங்க: தனுஷா? சிம்புவா? விஷாலா? அதர்வாவா? என்ன இழுத்துக்கிட்டு எல்லாருக்குமே ரெட் கார்டு தான்!
இதன்படி நடிகர்கள் தனுஷ், அதர்வா, சிம்பு, விஷால் மீது ரெட்கார்டு பாய்ந்தது. இந்த ரெட்கார்டு எதற்கு என்ற கேள்வி பலரிடம் உலாவி கொண்டிருக்கிறது. ரெட் கார்டு பொதுவாக ஒருவரின் தரத்தினை நிர்ணயிக்க பயன்படுகிறது.தயாரிப்பாளர்களிடம் அதிக தொகையை முன்பணமாக பெற்று கொண்டு நடித்து தராமல் இருப்பது, கால்ஷீட் கொடுத்துவிட்டு படபிடிப்புக்கு வராமல் தவிர்ப்பது, ஒப்பு கொண்ட படத்தினை சரியான நேரத்திற்கு முடித்து தராமல் இருப்பவர்கள் என இப்படியான நடிகர்கள் மேல் கூறப்படும் எச்சரிக்கை செய்திதான் இந்த ரெட்கார்டு.
மேலும் சினிமாவில் நடிகர்களின் சம்பளங்கள் உயர்வதற்கு காரணமே தயாரிப்பாளர்கள்தானாம். இவர்கள் நன்கு பிரபலமடைந்த நடிகர்கள் வேண்டும் என சம்பளத்தை உயர்த்தி கொண்டே செல்வதுதான் நடிகர்கள் அதிக சம்பளத்தினை கேட்பதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இதையும் வாசிங்க: சந்திரமுகி பாம்பை அலற விட்ட அனகோண்டா!.. லைகா போட்ட ஸ்கெட்ச் எல்லாம் விஷால் முன் வீணாப்போச்சே!..
அதர்வா, தனுஷ், சிம்பு போன்ற நடிகர்கள் இந்த சர்ச்சையில் சிக்கியதற்கு காரணம் இவர்கள் தயாரிப்பாளர்களிடம் பணத்தினை பெற்று கொண்டு உரிய நேரத்தில் படத்தினை தொடங்கவில்லையாம். மேலும் தற்போது தயாரிப்பாளர்கள் தங்களது பணத்தினை திரும்ப தரும்படியாகவும் அசலை மட்டும் தந்தால் போதாது அவர்கள் வாங்கிய வட்டி பணத்தையும் சேர்த்து தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அசலே கிடைப்பது கஷ்டம் என்ற நிலையில் எங்கு வட்டி பணமெல்லாம் வரப்போகிறது என நெட்டிசன்கள் மத்தியில் கருத்துகளும் உலாவுகின்றன. தயாரிப்பாளர்கள் முதலிலேயே அதிக அளவு தொகையை தராமல் இருப்பது இந்த மாதிரியான சம்பவத்திற்கு முற்று புள்ளி வைக்கும் என கருத்துகளும் நிலவுகின்றன.
இதையும் வாசிங்க: மாரிமுத்துவுக்கு பின்னாடி ஒரு வலியா? இதுவே வேறொருத்தியா இருந்தா போயானு போயிருப்பாங்க!