ஒரே இசைக்கருவியை வைத்து இளையராஜா பாடிய பாடல்... வைரமுத்துவுக்கு இதெல்லாம் தேவையா இப்படி பாடிட்டாரே...?

அந்தக் காலத்தில் கதாநாயகனை வாழ்த்தி பாடல் போட்டாங்க. எம்ஜிஆர், ரஜினியைச் சொல்லலாம். ஒரு இசை அமைப்பாளரை வாழ்த்தி நிறைய பாடல்கள் வந்தது என்றால் அது இளையராஜாவுக்குத் தான். ஓரம் போ ஓரம்போ பாடலில் பாளையம் பண்ணபுரம் சின்னத்தாயி பெத்த மகன், அடுத்து வாலி தொடர்ச்சியா இளையராஜாவை வைத்துப் பாடல் எழுதியுள்ளார். 'ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா', 'சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தப்பாதே', 'ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்ல', 'ராஜாவுக்கு ராஜா நான் தான்', 'சின்னத் தாயவள் தந்த ராசாவே ...' இப்படிப் பல பாடல்கள் இருக்கும்.

குறிப்பா அதிகபட்சமாக வாலி தான் இந்தப் பாடல்களை எழுதியிருப்பாரு. அதுல ஒரு பாட்டு தான் அக்னி நட்சத்திரத்தில் வந்த ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா பாடல். இந்தப் பாட்டை இளையராஜா பாடியிருப்பார். இந்தப் பாடல் ஒரு வித்தியாசமான பாட்டு. இந்தப் பாடலில் ஒரு கருவியை வைத்து மட்டும் இசை அமைத்திருப்பார். அது எலக்ட்ரானிக்ஸ் ட்ரம்ஸ். இன்னொரு பேரு ரிதம் பேடு.

இதையும் படிங்க... மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாரே! பிறந்தநாளின் போது ரசிகர்களுக்கு கண்டெண்ட் கொடுத்த இசைஞானி

இந்த ஒரு கருவியை மட்டுமே வைத்துப் பண்ணிய பாடல் தான் இது. ரொம்ப வித்தியாசமான இசையாக இருக்கும். இது ஒரு ஜாலி பாடல். அதனால் வாலி அவரது விருப்பத்திற்கு ஏற்ப வரிகளைப் போட்டிருப்பார். 'ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா. கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா. நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா. கோட்டை இல்லை. கொடியும் இல்லை. அப்பவும் நான் ராஜா...' என்று போட்டு இருப்பார்.

அதே போல முதல் இடை இசையில் அதே ரிதம் பேடு தான். 2வது இடை இசையிலும் அது தான் வேறு ரகத்தில் வரும். சரணத்திலும் அப்படித் தான் இருக்கும். வரவும் செலவும் எதுவுமின்றி வரவும் செலவும் உண்டு. உறவும் பகையும் எதுவுமின்றி உறவும் பகையும் உண்டு என தன் இஷ்டத்திற்கு வாலி வரிகளைப் போட்டு இருப்பார். இதை எப்படி போட்டாலும் பொருந்தும். முடிக்கும்போது அழகாக முடித்திருப்பார். வெளியில் தெரியும் அழகு. நிதமும் இனிமேல் நமது. விடியும் வரையில் கொண்டாட்டம்தான்.

கடைசியில் சந்தம் அழகாக அமைந்திருக்கும். 'நிலவும் மலரும் செடியும் கொடியும் கடலும் நதியும் கவிதை சொல்லும் ராஜா...' என்று அழகாக வரும் இந்தப் பாடல். என்ன வரி போட்டாலும் இதுக்குள்ள பொருந்தும். இதுக்குள்ள கவிப்பேரரசு வைரமுத்துவை எப்படி சீண்டினார். அந்த நேரத்தில் இளையராஜாவும், கவிஞர் வைரமுத்துவும் பிரிந்த நேரம். அப்போது நான் பெரிய ஆளு. நீ எங்கே போனா எனக்கென்னன்னு சொல்ற மாதிரி தான் பல்லவில வரிகள் போட்டுருப்பாங்க.

இதையும் படிங்க... ‘மைக் மோகன்’ பட்டம் பிடிக்கலையா? மனுஷன் சொல்ல வேண்டியதுதானே.. மோகன் சொன்னதை கேளுங்க

'ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா... தூக்காதே வேறு எங்கும் கூஜா...' அதாவது நீங்க எந்தப் பக்கம் போயி பாட்டு எழுதினாலும் என்பதை மறைமுகமாக சொல்வது போல அடுத்த வரிகள் வருகின்றன. 'நேற்று இல்லை நாளை இல்லை. எப்பவும் நான் ராஜா. கோட்டை இல்லை. கொடியும் இல்லை. அப்பவும் நான் ராஜா' என்று வரிகள் வரும்.

எந்தப் பாடலாசிரியரை வைத்து வேண்டுமானாலும் நான் பாட்டு எழுதுவேன்னு மறைமுகமாக சொன்னதாக அப்பவே பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அது கிட்டத்தட்ட ஒரு பனிப்போர் தான். எது எப்படி இருந்தாலும் இன்னைக்கும் இது இளமை குறும்பு கொப்பளிக்க அமைந்த வித்தியாசமான பாடல்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it