சுடப்பட்ட எம்.ஜி.ஆரும் சேலம் பெண் சாமியாரும்!.. இதுவரை வெளிவராத தகவல்...
எம்.ஜி.ஆரின் வாழ்வில் அவராலும் சரி, மக்களாலும் சரி மறக்க முடியாத ஒரு துக்க சம்பவம் எனில் அது அவர் நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டதுதான். எம்.ஜி.ஆர் அப்போது பீக்கில் இருந்தார். அவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வந்தது. எம்.ஜி.ஆர் சுடப்பட்டார் என செய்தி வெளியானது பலரும் பதறிப்போனார்கள்.
அவரின் ரசிகர்கள் கலங்கிப்போனார்கள். திரையுலகமே அதிர்ந்து போனது. எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டுவிட்டார் எனவும், அவரை எம்.ஜி.ஆரும் திருப்பி சுட்டார் எனவும் சொன்னார்கள். எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். சிகிச்சைக்கு பின் எம்.ஆர்.ராதா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அசிங்கமாக கேலி செய்த சொந்த ஊர்க்காரர்கள்!.. எம்.ஜி.ஆர் வளர்ந்த பின் நடந்தது இதுதான்!..
எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எம்.ஜி.ஆரின் உயிருக்கு ஆபத்தில்லை என சொல்லப்பட்டது. ஆனாலும், சுடப்பட்ட குண்டை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்க முடியவில்லை. ஏனெனில், அது அவரின் கழுத்துக்கும், காதுக்கும் இடையே ஒரு சிக்கலான இடத்தில் இருந்தது.
அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பயந்தார்கள். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மருத்துவமனையின் முன்பு கூடியிருந்தனர். பல கோவில்களிலும் பிரார்த்தனை செய்யப்பட்டு பிரசாதங்கள் வந்தது. அப்போது அன்னமிட்ட கை படத்தின் தயாரிப்பாளருக்கு தெரிந்த ஒரு பெண் சாமியார் சேலத்தில் இருந்தார்.
இதையும் படிங்க: கமலுக்கு முன்பே பல கெட்டப்புகளை போட்ட எம்.ஜி.ஆர்!.. அதுவும் அதே டைட்டில்!. நடந்தது இதுதான்!..
ஒருமுறை அவரை எம்.ஜி.ஆருக்கும் அறிமுகம் செய்து வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் சுடப்பட்டது கேள்விப்பட்டு அவர் பல யாகங்களை நடத்தினார். மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை எடுத்து வந்து எம்.ஜி.ஆரின் நெற்றியில் வைத்தார். எம்.ஜி.ஆருக்கு அதில் நம்பிக்கை இல்லையென்றாலும் ஜானகி அம்மாவுக்காக ஏற்றுக்கொண்டார்.
அந்த பெண் சாமியார் முட்களின் மீது அமர்ந்து தவம் செய்தார். அதன் பலனோ என்னவோ எம்.ஜி.ஆருக்கு வந்த தும்மலில் தோட்டா சில மில்லி மீட்டர் நகர்ந்தது. ஆபத்து இல்லை என்று தெரிந்ததும் மருத்துவர் சத்தியநாராயண ராவ் என்பவர் அறுவை சிகிச்சை செய்து அந்த தோட்டாவை வெளியே எடுத்தார்.
இதையும் படிங்க: பின்னணி இசையால் வந்த பிரச்சனை!. சிவாஜி பட இயக்குனரை ஒதுக்கி வைத்த எம்.ஜி.ஆர்..