அவர் சூர்யாவோட ஆள்!..மங்காத்தா ரிலீஸில் கடுப்பான அஜித்...இவ்வளவு நடந்துச்சா?...

ajith
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர் நடிகர் அஜித். இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். தல தல என உயிரை விடும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அஜித் வில்லனாக நடித்து ஹிட் அடித்த திரைப்படம்தான் மங்காத்தா. இப்படத்தின் மெகா வெற்றிதான் அஜித்தின் மார்க்கெட்டையே உயர்த்தியது. பல கோடிகளை வசூலித்தது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி இப்படத்தை தயாரித்திருந்தார்.

mankatha
இப்படம் தயாரானதும் வினியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திடம் கொடுத்தார் துரை தயாநிதி. உதயநிதி ஸ்டாலின் அதில் கொஞ்சம் லாபம் வைத்து க்ரின் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார்.
இது எதுவும் அஜித்துக்கு தெரியாது. க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து அதிக படங்களை தயாரித்த நிறுவனம் ஆகும். க்ரின் ஸ்டுடியோஸ் ஞானவேல் ராஜா சூர்யாவின் உறவினரும் ஆவார். இது திரைத்துறையில் எல்லோருக்கும் தெரியும்.

mankatha
மங்காத்தா படத்தை க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்கிற போஸ்டரை பார்த்த அஜித் கடுப்பாகி விட்டாராம். உடனே துரை தயாநிதியை அழைத்து ‘அவர் சூர்யாவின் ஆள்’ என் படத்தை ஏன் அவரிடம் கொடுத்தீர்கள். அவருடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள் என கறார் காட்ட அப்படியே நடந்தது. அதன்பின் துரை தயாநிதி மற்றும் சன் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை ரிலீஸ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொஞ்சம் இருமா!..கண்ட்ரோல் பண்ணிக்குறோம்!. கவர்ச்சியை வாரி இறைக்கும் சீரியல் நடிகை…