அந்த நடிகரா? செட் ஆகாது.. அஜித் நடிக்க மறுத்து அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம்
Actor Ajith: கோலிவுட்டில் ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். சமூக வலைதளங்களில் அஜித் பெயர்தான் டிரெண்டிங்கில் இருக்கிறது. அவர் படம் வெளியாகவில்லை என்றாலும் அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. நாள்தோறும் ஏதாவது ஒரு அஜித்தின் புகைப்படம் வெளியாகிக் கொண்டே இருக்கின்றது.
இந்த நிலையில் அஜித் சம்பந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறினார். தலைநகரம் என்ற ஒரு ஹிட் படத்தை கொடுத்து அடுத்ததாக கையில் கதையுடன் காத்துக் கொண்டிருந்தாராம் சுராஜ். அப்போது மோகன் நடராஜன் சுராஜிடம் ‘அஜித்திற்கு ஏதாவது கதை இருக்கிறதா’ என கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: செந்தூரப்பாண்டி படப்பிடிப்பில் கேப்டன் செய்த செயல்!.. நெகிழ்ந்து போன விஜய்!.. என்ன மனுஷன்யா?!..
இவரிடம் ஏற்கனவே கதை இருந்ததனால் அதை அஜித்திடம் போய் சொல்லியிருக்கிறார். கதை கேட்டதும் அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதே நேரத்தில் கிரீடம் படத்தில் ஒரு 15 நாள்கள் நடித்துக் கொண்டிருந்தாராம் அஜித். சுராஜ் சொன்ன கதையில் அஜித்தின் கதாபாத்திரம் போலீஸ் வேடம். கிரீடம் படத்திலும் அஜித் போலீஸ் வேடத்தில்தான் நடித்திருப்பார்.
அதுமட்டுமில்லாமல் சுராஜ் சொன்ன கதையில் ஒரு முன்னனி நடிகரும் நடிக்க இருந்ததனால் அதையும் காரணம் காட்டி அஜித் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகே இந்த கதை அர்ஜூனுக்கு சென்றிருக்கிறது. அந்தப் படம்தான் மருதமலை. சுராஜ் சொன்னதின் பேரில் அந்த முன்னனி நடிகர் வடிவேலுவாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பே ராஜா திரைப்படத்தில் அஜித்துக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
இதையும் படிங்க: ஆடு ஜீவிதம் படத்தின் ரியல் கலெக்ஷன் இதுதான்!.. பிரித்விராஜ் வெளியிட்ட பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..
மருதமலை படத்திலும் வடிவேலு இருப்பதனால்தான் அஜித் முடியாது என சொல்லியிருப்பதாக தெரிகிறது. ஆனால் மருதமலை பட கதையை அர்ஜூனிடம் சொன்ன போது ‘இதுவரை நான் ஒரு ஏ.எஸ்.பி அல்லது டி.எஸ்.பி.யாக நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் கான்ஸ்டபிளாக அதுவும் வடிவேலு ஏட்டு. அவருக்கு கீழே நானா’ என கிண்டலாக கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டாராம்.