Cinema History
நீங்க நல்லா நடிச்சாலும் படம் ஏன் ஓடுறதில்ல?!.. அஜித்திடம் கேட்ட கேள்வி!.. ஏகே சொன்ன நச் பதில்!..
1993ம் வருடம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய அஜித் கடந்த 30 வருடங்களாகவே நடித்து வருகிறார். அதுவும் கடந்த 15 வருடங்களாக மாஸ் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். பில்லா படத்தில் ஸ்டைலீஸ் ஹீரோவாகவும், மங்காத்தா படத்தில் மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.
ஒருகட்டத்தில் விஜய்க்கு நிகராக இவருக்கும் ரசிகர்கள் உருவானார்கள். இத்தனைக்கும், 15 வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்தவர் அஜித். ஆனாலும், அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதன்பின்னரே அவருக்கு ரசிகர்கள் உருவனார்கள்.
இதையும் படிங்க: நைட்டு 12 மணிக்கு இயக்குனரின் வீட்டுக்கு போய் வாய்ப்பு கேட்ட அஜித்!. இவரா இப்போ இப்படி மாறிட்டாரு!.
15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம்தான் பில்லா. இது ரஜினி நடித்த படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் உருவானதன் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. ஒருமுறை ரஜினியை அஜித் சந்தித்தபோது ரஜினி சாதாரணமாக விசாரிக்க ‘நானும் தொடர்ந்து நடிக்கிறேன் சார். ஆனா படங்கள் பெருசா ஓடுறதே இல்ல’ என சொல்லி இருக்கிறார்.
அப்போது ரஜினி ‘என் பில்லா படத்தை ரீமேக் செய்து நடியுங்கள்’ என சொல்ல அப்படித்தான் பில்லா படம் உருவானது. அது அஜித்துக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது. அஜித்தின் கேரியர் அப்படத்தின் வெற்றியால்தான் டேக் ஆப் ஆனது. 2000ம் ஆண்டுகளில் அஜித்தின் பல படங்கள் தோல்வியை பெற்றது. அஜித் நன்றாக நடித்த முகவரி, சிட்டிசன் ஆகிய படங்களும் கூட வசூலை பெறவில்லை.
இதையும் படிங்க: அஜித்குமார் இதையே தான் பண்ணிட்டு இருக்காரு… கிரீடம் படத்தில் இருந்து குட் பேட் அக்லி வரை… இத கவனிச்சீங்களா?
இதுபற்றி பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது. அதாவது ‘சமீபகாலமாக நீங்கள் நடிக்கும் படங்களில் உங்கள் நடிப்பு நன்றாகவே இருக்கிறது. ஆனால், படங்கள் ஓடுவதில்லை. சரியான கதையை நீங்கள் தேர்வு செய்வதில்லை என்பதுதான் காரணமா?’ என கேட்கப்பட்டது.
இதில் கோபமடைந்த அஜித் ‘நான் ஒரு நடிகன். நடிப்பது மட்டும்தான் என் வேலை. ஒரு படம் ஓடுகிறது எனில் இயக்குனர் காரணம் என சொல்கிறார்கள். ஆனால், தோற்றுவிட்டால் நான் எப்படி காரணம் ஆக முடியும்?.. ஒரு படம் ஓடும் என கணிக்க தெரிந்தால் நான் இயக்குனராகி இருப்பேன். நடிகராக இருந்திருக்க மாட்டேன். படம் ஓடவில்லை எனில் அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் தவறுதானே தவிர என்னுடைய தவறு அல்ல’ என அப்போதே பொங்கியிருந்தார் அஜித்.