Connect with us
ajithkumar

Cinema History

மோசமாக எழுதிய பத்திரிக்கையாளர்… சரியான நேரத்துல அஜித் கொடுத்த பதிலடி என்னனு தெரியுமா?…

அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அஜித்குமார். இவர் தனது விடாமுயற்சியினால் சினிமாவில் நுழைந்தவர். அமராவதி திரைப்படத்தில் நடிப்பதற்கு இவர் தயாரிப்பாளரிடமோ அல்லது இயக்குனரிடமோ சம்பளம் பற்றிய எந்த கோரிக்கையையும் வைத்தது இல்லையாம். சினிமாவை தவிர்த்து இவர் நிஜ வாழ்விலும் சிறந்த மனிதர்.

தான் உதவி செய்வது யாருக்கும் தெரியகூடாது என நினைப்பவர். என்னதான் சினிமாவில் நடித்தாலும் இவர் தனது சொந்த வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். இவருக்கு மிகப்பிடித்த விஷயம் என்றால் அது பைக் ஓட்டுவது. அவ்வப்போது உலகம் சுற்றும் வாலிபனாகவும் மாறிவிடுவார். இவர் வாலி, வில்லன், விஸ்வாசம் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:அப்புறம் என்னங்க அவரே சொல்லிட்டாரே… விஜய்க்காக இறங்கி வந்த சூப்பர்ஸ்டார்..! ஷாக்கான ரசிகர்கள்..!

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இவரின் படங்களுக்காக சேர்ந்த கூட்டத்தை தவிர இவரின் குணத்திற்காகவும் சேர்ந்த கூட்டமும் உண்டு. உதவி என கேட்பவர்களுக்கு தயங்காமல் உதவி செய்பவர் நடிகர் அஜித்குமார். அவ்வப்போது சினிமாவில் வலம் வந்தால் கூட இவரை நேசிப்பவர்களும் அதிகம். பொதுவாக இவர் எந்த ஒரு மனிதரையும் பகைக்கமாட்டார்.

பொதுவாக பத்திரிக்கையாளர்கள் சினிமாவை பற்றிய கருத்துகளை எழுதுவது வழக்கம். ஆனால் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களை எழுதுவது அவ்வளவும் நல்ல செயல் அல்ல. இந்த மாதிரியான சம்பவம் ஒன்று அஜித்தின் வாழ்வில் அரங்கேறியுள்ளது. இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர்.

இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பின்னரே குழந்தைகள் பிறந்தன. மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது பத்திரிக்கை பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அஜித்தின் சொந்த விஷயங்களை இழுத்து எழுதியுள்ளார். இதனால் கடுப்பான அஜித் அவரை ஏதுமே செய்யாமல் அமைதியாக இருந்துள்ளார். ஆனால் கடைசி வரை அவரை அஜித் நிராகரித்து வந்துள்ளார்.

இதையும் வாசிங்க:குலாப் ஜாமூன் கொடுத்து மன்சூரை கரெக்ட் பண்ண நினைச்ச நடிகர்!.. கடைசில பல்பு வாங்கினதுதான் மிச்சம்..

பின் ஒரு முறை சிட்டிசன் படத்தின் ஷூட்டிங்கின் பொழுது அஜித் மதிய உணவினை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அவரிடம் ஒருவர் வந்து மூத்த பத்திரிக்கையாளர்கள் இரண்டு பேர் அஜித்தை சந்திக்க வந்திருப்பதாக கூறுகிறார். அஜித் உடனே என்ன வேண்டுமாம்? என கேட்டு வருமாறு தனது உதவியாளரான வி.கே.சுந்தரிடம் கூறுகிறார். அப்போது அங்கு வந்தவர்கள் ஒரு முறை அஜித்தை பற்றி தவறாய் எழுதிய அந்த பத்திரிக்கையாளர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது சிகிச்சைக்காக உதவி செய்யுமாறும் கேட்டுள்ளனர். சுந்தரும் அதனை அஜித்திடம் கூற எவ்வளவு செலவாகும் என கேட்டு அந்த தொகையை அஜித் கொடுத்துள்ளார்.

அப்போது சுந்தர் அஜித்திடம் ‘சார் அவங்க உங்களை பத்தி தப்பா எழுதினவங்க…அவங்க மேல உங்களுக்கு கோபம் இல்லையா?’ என கேட்டுள்ளார். அதற்கு அஜித் அவர் நன்றாக இருந்தால் நான் எதிர்த்திருக்கலாம். ஆனா இந்த மாதிரியான நேரத்தில் நான் எதிர்ப்பது சரியல்ல, அவர் திரும்ப எழுந்து வந்து இதேபோல் தவறாய் எழுதினால் நான் அப்போது கேட்பேன் என கூறியிருக்கிறார். என்னதான் தன்னை தவறாக பேசியிருந்தாலும் முடியாத நிலையில் உதவும் இவரின் குணமே இவருக்கென ரசிகர்கள் உருவாக காரணமாகும்.

இதையும் வாசிங்க:நான் இப்ப அதுக்காக வரல!. லியோ பட கேள்வியால் கடுப்பான கீர்த்தி சுரேஷ்.. இது தேவையா பாஸ்!.

google news
Continue Reading

More in Cinema History

To Top