சினிமாவில் நடிகராக, இயக்குனராக இயக்குனராக இருக்கும் பெரும்பாலானோர் சினிமா ஆசையில் தங்களின் சொந்த ஊரைவிட்டு சென்னை வந்தவர்கள்தான். பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா, ராமராஜன், ரஜினிகாந்த், விஜயகாந்த் என பெரிய பட்டியலே இருக்கிறது. இவர்கள் எல்லோரும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என போராடியவர்கள்.
சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமாக கிடைத்துவிடாது. அப்படியே கிடைத்தாலும் நல்ல வருமானம் கிடைக்காது. தங்குவதற்கு வாடகை கொடுக்க முடியாமல், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட நேரிடும். பிரபலத்தின் வாரிசாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. இல்லையெனில் சினிமாவில் முயற்சி செய்து கொண்டே எதாவது வேலை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: வளர்ந்து கொண்டே இருக்கும் பாக்கியா!… மொத்தமாக ராதிகாவிடம் கையும், களவுமாக சிக்கிய கோபி!…
அப்படி சினிமாவில் நுழைவதற்கு முன் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்த சில பிரபலங்கள் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். இயக்குனராக வாலி, குஷி ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறியிருக்கும் எஸ்.ஜே. சூர்யா சினிமா ஆசையில் சென்னை வந்த புதிதில் பகுதிநேர ஊழியராக ஹோட்டலில் சர்வராக வேலை செய்திருக்கிறார்.
அதேபோல், சொல்லாமலே, பிச்சைக்காரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சசியும் ஹோட்டலில் வேலை செய்தவர்தான். அதேபோல் ‘இந்தாம்மா ஏய்’ என கத்தி வசனம் பேசி ரசிகர்களிடம் பிரபலமாகி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக கலக்கி மறைந்த மாரிமுத்துவும் ஹோட்டலில் வேலை செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் விஷயத்துல இப்படி நடந்துச்சுனா வீடியோவே போடுவாரு! யாரு அஜித்தா? பிரபலம் சொன்ன தகவல்
அதேபோல், பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வையாபுரியும் ஹோட்டலில் வேலை செய்தவர்தான். அதேபோல், விஜய் சேதுபதியும் ஒருகாலகட்டத்தில் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.
வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஹோட்டலில் செய்து விட்டு சரியான வாய்ப்பு கிடைத்தவுடன் இவர்கள் எல்லோரும் சினிமாவில் நுழைந்து சாதித்து காட்டியுள்ளனர். இவர்களை போல இன்னும் பலரும் பல வேலைகளை செய்து மேலே வந்திருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…