Categories: Cinema News latest news

விஜயை பார்க்குறதா? இல்ல இவர பார்க்குறதா? தளபதி68ல் வில்லனாக மச்சக்கார நடிகர் – தளபதி பாடு திண்டாட்டம்தான்

Thalapathy68: ரைப்படம் லியோ. இந்தப் படத்தை லோகேஷ் இயக்க லலித் இந்தப் படத்தை தயாரிக்கிறார். அனிருத் இசையில் படம் தாறு மாறாக வந்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் சென்னையில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் – லோகேஷ் கூட்டணி என்றாலே ஒரு மாஸ் கூட்டணி என்றாகி விட்டது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜயை எந்தளவுக்கு மாஸாக காட்டியிருப்பார் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

இதையும் படிங்க: ஒரு கோடி சம்பளமாக வாங்கிய ஒரே படம்… தயாரிப்பாளரையே தப்பாக நினைத்த சிவாஜி கணேசன்!

இதில் விக்ரம் படத்தின் ஹிட்டுக்கு பிறகு லோகேஷ் இயக்கிய படம் லியோ. இந்தப் பக்கம் ரஜினிக்கு சரியான போட்டியாக வலம் வரும் விஜய். இப்படி பெரும் சூறாவளிக்கு பிறகு இருவரும் இணைந்து படத்தை எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதை இன்னும் ஒரு 30 நாள்களில் பார்க்க போகிறோம்.

இந்த நிலையில் ஒரு பக்கம் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணையும் தளபதி68 படத்தை பற்றிய அப்டேட் நாள்தோறும் வந்து அந்தப் படத்தின் ஹைப்பை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மாதவன் ஆகியோர் நடிக்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவித்தார்கள்.

இதையும் படிங்க: டூயட் ஆட முடியலைனாலும் மச்சக்காரன்தான்பா! ரெண்டு ஹீரோயின்களை தட்டித் தூக்கிய அஜித்

மேலும் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி68 படத்தில் மற்றுமொரு சார்மிங்கான நடிகரை களமிறக்கவும் வெங்கட் பிரபு முயற்சித்து வருகிறாராம்.

தனி ஒருவன் படத்தின் மூலம் சரியான கம்பேக் கொடுத்து தரமான வில்லன் நான் தான் என்று நிரூபித்துக் காட்டிய அரவிந்த்சாமியைதான் இந்தப் படத்தில் நடிக்கவைக்க தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஓரளவுக்கு அரவிந்த்சாமி கமிட் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கீர்த்திக்கு கல்யாணமாம்… ஆனா அந்த ஆளு இல்ல…! ட்விஸ்ட் வைத்த சூப்பர் நியூஸ்!

ஒரே திரையில் விஜய் மற்றும் அரவிந்த்சாமியை பார்க்கும் ரசிகர்களுக்கு இரண்டு கண்களும் போதாது என்றுதான் சொல்லவேண்டும்.

Published by
Rohini