ஐயோ அது மொக்க படம் புரோ!.. இயக்குனர் சொல்லியும் வற்புறுத்தி இயக்க வைத்த தனுஷ்...
Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பெரிய பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் அதிசயித்துப் பார்க்கக் கூடிய நடிகராகவும் சமீபகாலமாக உருவெடுத்து வருகிறார் தனுஷ்.
அனுபவம் , நல்ல பக்குவம் என இந்த சிறு வயதிலேயும் தனுஷிடம் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு ஒரு சில பிரபலங்களே ஆச்சரியத்துடன் பேசி வருவதை பார்த்திருக்கிறோம். சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் வித்தியாசமாகவே இருக்கின்றன.
இதையும் படிங்க: காதலிக்காக நிஜமாகவே பச்சை மிளகாயைத் தின்று அசத்திய தனுஷ்… அட அவர் அப்பவே அப்படித்தான்!..
அவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில்தான் அந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிலையில் தனுஷை வைத்தே நான்கு ஹிட் படங்களை கொடுத்த மித்ரன் ஜவஹர் சில சுவாரஸ்ய சம்பவத்தை கூறினார்.
தனுஷை வைத்து முதல் ஹிட் படமான யாரடி நீ மோகினி படத்தை இயக்கினார் மித்ரன் ஜவஹர். இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். அடுத்ததாக குட்டி என்ற படத்தை எடுத்தார். அதுவும் ஒரு ரீமேக் படம்தான். அந்த சமயத்தில்தான் மித்ரன் ’இனிமேல் நான் ரீமேக் படங்களை எடுக்கவே மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்திருந்தாராம்.
இதையும் படிங்க: கோட் படம் காப்பி அடிக்கும் அந்த ஜெமினி மேன் படக்கதை தெரியுமா? அட கேட்கவே செம மாஸா இருக்கே!
அந்த நேரத்தில் தனுஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்கும் வாய்ப்பு மித்ரனுக்கு வந்திருக்கிறது. ஆனால் அதுவும் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக்தான். அதனால் நான் இந்தப் படத்தை எடுக்கவே மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
இதை அறிந்த தனுஷ் ‘ஏன் இப்படி சொல்றீங்க?’ என கேட்க, அதற்கு மித்ரன் ‘ஐயோ சார் இந்தப் படத்தின் தெலுங்கு வெர்சனை பார்த்தேன். அது ஒரு மொக்க படம். எப்படி என்னால் எடுக்க முடியும்?’ என்று கேட்டிருக்கிறார். ஆனால் தனுஷ் 'யோவ் நானும் பார்த்தேன். நல்ல படம். செம காமெடியாக இருக்கிறது. நான் பண்ணப் போறேன். நீ என்ன சொல்ற?’ என கேட்டாராம்.
இதையும் படிங்க: விஜய் டிவி புகழ் அமுதவாணனுக்கு மனைவி கொடுத்த சர்பரைஸ் கிஃப்ட்! என்ன ஒரு ஆனந்தம்? வைரலாகும் புகைப்படம்
மித்ரன் அதன் பிறகு கொஞ்சம் அவகாசம் கேட்டு அதன் பிறகுதான் அந்தப் படத்தை எடுத்தாராம். அந்தப் படம்தான் உத்தமப்புத்திரன் திரைப்படம்.