ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து லைக் போடும் தனுஷ்!.. இருவரும் மீண்டும் இணைவார்களா?!...
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என 3 தொடர் ஹிட்டுக்களை கொடுத்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தனுஷ். அப்போது ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.
அதன்பின் தனுஷின் வீட்டுக்கு போய் நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ஐஸ்வர்யா அடம்பிடிக்க குடும்பத்தினர் ரஜினியை சம்மதிக்க வைத்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். 17 வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு பின் திடீரென ஒரு நாள் தான் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் தனுஷ்.
இதையும் படிங்க: கமல் கைவிட்ட படத்தில் சிம்புவா? என்னடா இங்க நடக்குது?!
தனுஷின் குடும்பத்தில் ஐஸ்வர்யா ஒரு நல்ல மருமகளாக இல்லை என்றே பலரும் சொன்னார்கள். ஆனாலும், உண்மையான காரணத்தை தனுஷோ, ஐஸ்வர்யாவோ சொல்லவில்லை. தற்போது அவர்களின் இரு மகன்களும் இருவரிடமும் இருக்கிறார்கள். ஒருபக்கம் இருவரையும் ஒன்றாக சேர்த்துவைக்க சில முயற்சிகளும் நடந்தது.
ஆனால், விவகாரத்தில் தனுஷ் உறுதியாக இருந்ததால் அது நடக்கவில்லை. ஆனாலும், ஐஸ்வர்யாவை தனுஷ் முழுதாக வெறுக்கவில்லை என்றே தெரிகிறது. தெலுங்கில் நடன இயக்குனராக கலக்கி வரும் ஜானியை வைத்து ஒரு குறும்படத்தை ஐஸ்வர்யா எடுத்தபோது அதற்கு வாழ்த்து சொன்னார் தனுஷ்.
லால் சலாம் படம் வெளியானபோதும் படத்திற்கு வாழ்த்து சொன்னார் தனுஷ். மேலும், இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா போடும் பதிவுகளுக்கு தொடர்ந்து லைக்ஸ் போட்டு வருகிறார். ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டாலும் உடனே லைக்ஸ் போடுகிறார் தனுஷ்.,
பொதுவாக கணவன் மனைவி பிரிந்துவிட்டால் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால், தனுஷ் நடந்து கொள்வதை பார்த்தால் அவர் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைவாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. உண்மையை சொன்னால் அதுதான் ரஜினி ரசிகர்களின் ஆசையும் கூட. நல்லது நடந்தால் சரிதான்...