Connect with us
dhanush

Cinema News

திட்டுறத கொஞ்சம் நிறுத்துங்கப்பா!.. டைரக்டர் அவர் இல்லையாம்!. ராஜா பயோபிக் பரபர அப்டேட்!…

Ilayaraja: இப்போது திரையுலகில் எல்லோராலும் பரபரப்பாக பேசப்படுவது இசைஞானி இளையராஜாவின் பயோபிக்தான். இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கவிருக்கிறார்கள். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, ராக்கி, சாணி காயிதம் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய ரத்தக்களறி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார்.

இங்குதான் ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். கத்திக்குத்து, துப்பாக்கி, ரத்தம் என படங்களை எடுத்து வரும் அருண் மாதேஸ்வரன் எப்படி இளையராஜாவின் வாழ்க்கையை படமாக எடுக்க முடியும். இது தவறான சாய்ஸ்.. வேறு இயக்குனர் இயக்குவது நல்லது என சமூகவலைத்தளங்கள் பலரும் கதறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: கடவுளை படமெடுக்க கசாப்புக்கடைக்காரனா? இளையராஜா பயோபிக்கை விமர்சித்த பிரபலம்!…

அதுவும், இளையராஜாவை கடவுளாகவே பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் அதிருந்து போயிருக்கிறார்கள். ஒரு எழுத்தாளர் ஒருவர் ‘கடவுளை படமெடுக்க கசாப்பு கடைக்காரனா?’ என பதிவிட பலரும் அதை ஷேர் செய்து வருகிறார்கள். இந்நிலையில்தான் இந்த படத்திற்கு கமல்ஹாசன்தான் திரைக்கதை அமைக்கப்போகிறார் என்கிற செய்து கொஞ்சம் ஆறுதலை கொடுத்திருக்கிறது.

அதோடு, இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என சொன்னாலும் எல்லா வேலையும் செய்யப்போவது தனுஷ்தானாம். அருண் மாதேஸ்வரன் தனுஷுக்கு உதவியாக மட்டுமே இருப்பார் என்கிற ஆறுதல் செய்தி வெளிவந்திருக்கிறது. தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி என்கிற படத்தை இயக்கினார். மேலும், அவரின் 50வது படமான ராயன் படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பயோபிக் படத்துக்கு இளையராஜாவின் சம்பளம் இதுதான்!. இந்த விஷயத்துல அவர் செம கறாரு!…

பொதுவாக கமல் எல்லா வேலையும் செய்துவிடுவார். ஆனால், இயக்குனராக வேறு ஒருவரின் பெயர் வரும். அதுபோல, இளையராஜா பயோபிக்கிலும் தனுஷ்தான் எல்லா வேலையும் செய்யப்போகிறார் என சொல்லப்படுகிறது. ராஜாவின் பயோபிக்கை உணர்ந்து படமெடுக்கும் ஆளுமையும், திறமையும் தனுஷுக்கு இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும், இளையராஜாவின் மொத்த வாழ்க்கையையும் இரண்டரை மணி நேரத்தில் காட்ட முடியுமா என்கிற சந்தேகமும் பலருக்கும் எழுந்திருக்கிறது. அவர் ஒரு சகாப்தம். அவர் வாழ்வில் பல முக்கிய சம்பவங்கள் இருக்கிறது. அதையெல்லாம் எப்படி காட்டப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

google news
Continue Reading

More in Cinema News

To Top