
Cinema News
யாரும் வராதீங்க! கிட்ட கூட நெருங்க முடியாத வகையில் இப்படி ஒரு வேலியா? ஒரு முடிவோட இருக்கும் தனுஷ்
Actor Dhanush: தமிழ் சினிமாவில் தனுஷின் வளர்ச்சி ஒரு அசுர வளர்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. அவரின் ஆரம்பகால சினிமாவில் இருந்து பார்த்து வரும் ரசிகர்கள் இப்படியும் ஒரு நடிகன் இருப்பாரா என்று யோசிக்கும் அளவிற்கு எட்டாத உயரத்தை அடைந்திருக்கிறார்.
இதெல்லாம் ஒரு மூஞ்சியா? சினிமா பின்புலம் இருக்கிறதால் யார் வேண்டுமென்றால் நடிக்க வந்து விடலாமா? என்ற ஏகப்பட்ட விமர்சனங்கள் தனுஷ் மீது பாய்ந்தன. ஆனால் அதையெல்லாம் தூசியாக நினைத்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: ஒத்த போஸ்டர்ல மொத்த சோலியும் முடிச்சிட்டீங்களே!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை இதுதானா!
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் தனுஷ். அவரின் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் தனுஷ் உருவாக்கினார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2 முறை பெற்றவர் தனுஷ். அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறினார். ஒருபக்கம், நல்ல கதையம்சம் உள்ள, நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதைகளிலும், ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..
இந்த நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி அனைவரையும் மிரட்டியது.
இந்தப் படத்திற்கு யாருடன் தனுஷ் இணையப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே வருகிறது.ஆனால் தனுஷ் 2025 ஆம் ஆண்டு முற்பகுதி வரை அவரின் கால்ஷீட்டை ஹவுஸ் ஃபுல்லாக வைத்திருக்கிறாராம்.
இதையும் படிங்க: இப்படியே போனா எல்லா படமும் ரெண்டு பார்ட்டுதான்!.. தயாரிப்பாளர்களை கதறவிடும் ஷங்கர்…
யாருடன் நடிக்க வேண்டும், எந்த இயக்குனருடன் சேர வேண்டும் என்பதை முன்பே திட்டமிட்டு அடுத்த இரண்டு வருஷத்துக்கும் எந்த ஒரு இயக்குனரும் வாய்ப்பு கேட்காதவாறு தனது கால்ஷீட்டை நிரப்பி வைத்திருக்கிறாராம் தனுஷ்.