ஷூட்டிங்கில் தன்னை யார் என்றே மறந்துபோன ஜனகராஜ்!. மனுஷனுக்கு இப்படி ஒரு நோயா!..

Published on: May 5, 2024
janagaraj
---Advertisement---

1978 முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ஜனகராஜ். 2008ம் வருடம் ஆக்டிவாக நடித்து வந்த ஜனகராஜ் கடந்த 15 வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இல்லை. அதற்கு அவர் காரணம் இல்லை. அவரை பற்றி வெளியே பரவிய வதந்திகள். அது அவரை பிடிக்காதவர்கள் கிளப்பிவிட்ட வதந்திகள்.

ஜனகராஜ் இப்போது நடிப்பதில்லை. அதில் அவருக்கு ஆர்வமில்லை. அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவர் மிகவும் கோபக்காரர். அவரை வைத்து காட்சிகள் எடுப்பது மிகவும் கஷ்டம் என பலரும் கொளுத்திபோட மொத்த சினிமா உலகமும் அவரை புறக்கணித்துவிட்டது. ஒரு நல்ல கலைஞனை அவன் வாழும் போது புறக்கணிப்பது பெரும் பாவம். ஆனால், அதை சினிமா உலகம் அவருக்கு செய்தது.

இதையும் படிங்க: 8 வருடத்தில் 60 திரைப்படமா? யாருப்பா அந்த நடிகர்? எல்லாத்துக்கும் அந்த ஒரு படம்தான் காரணமா?

அதற்கு காரணம் ஜனகராஜ் மிகவும் வெளிப்படையானவர். தப்பு என தெரிந்தால் யாராக இருந்தாலும் உடனே கோபத்தை காட்டிவிடுவார். இது சினிமா உலகில் பலருக்கும் பிடிக்காது. சினிமாவில் உள்ளுக்குள் வன்மத்தையும், விஷத்தையும் வைத்திருந்தாலும் சிரித்துக்கொண்டே பேச வேண்டும். எல்லோரையும் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இருக்க வேண்டும். ஜால்ரா போட வேண்டும்.

இல்லையேல் வாய்ப்பு கிடைக்காது. கட்டம் கட்டி விடுவார்கள். இதுதான் ஜனகராஜுக்கும் நடந்தது. 80,90களில் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக இருந்தார். இத்தனைக்கும் கவுண்டமணி அப்போது பீக்கில் இருந்தார். காமெடி மட்டுமல்ல. குணச்சித்திர வேடத்தில் ஜனகராஜ் பின்னி எடுப்பார். அதனால்தான் பலரும் அவரின் பக்கம் போனார்கள்.

இதையும் படிங்க: ஜாபர் பிரச்சினையில் ரஜினி, விஜயை உள்ளிழுக்கும் அமீர்! அப்போ அதெல்லாம் உண்மைதானா?

பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் ஜனகராஜுக்கு முக்கிய வேடம் இருக்கும். நாயகன், ரோஜா படங்களை பார்த்தால் ஜனகராஜ் எப்படிப்பட்ட நடிகர் என்பது புரியும். இதுவெல்லாம் சுட்டுப்போட்டாலும் கவுண்டமணிக்கு வராது. கடைசியாக தாதா 87 படத்தில் நடித்திருந்தார். 96 படத்தில் விஜய் சேதுபதி ஆசைப்பட்டு கேட்டதால் ஒரு காட்சியில் நடித்தார்.

janagaraj

ஜனகராஜுக்கு மறதி நோய் உண்டு. பாரதிராஜாவின் இயக்கத்தில் காதல் ஓவியம் படத்தில் நடித்தபோது படப்பிடிப்பில் தன்னை யார் என்பதையே மறந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் உலவி கொண்டிருந்தாராம். அதன்பின் மெல்ல மெல்ல நினைவுகள் வந்த பின்னரே அவர் நடித்திருக்கிறார்.

இப்போது தாத்தா என்கிற படத்தில் நடித்து வருகிறார். காக்கி சட்டையுடன் எலும்பும் தோலுமாக, வெள்ளை தாடியுன் பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் அவர் நிற்கும் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி 80 கிட்ஸ்களை அதிர வைத்தது. ஆனால், ஜனகராஜ் மகிழ்ச்சியாகவே இப்படத்தில் நடித்து வருகிறார்.,

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.