எனர்ஜி ஏத்த இப்படியா? ஒரு நாளைக்கு எத்தன லிட்டர் பாருங்க.. அந்த சமாச்சாரமுமா? ஜீவனின் அட்டகாசம்

Published on: November 16, 2024
jeevan
---Advertisement---

காக்க காக்க படத்தின் மூலம் ஒரு வில்லனாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஜீவன். அந்தப் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடித்து படத்தின் வெற்றிக்கும் ஒரு காரணமாக இருந்தார் ஜீவன். ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹீரோவாக அவதரித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆஸ்கார் மூவிஸ் சார்பாக ஜீவன் நடிப்பில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டனர்.

2 கோடியில் சம்பளம்: அதுதான் தோட்டா திரைப்படம். ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பிலேயே ஆஸ்கார் மூவிஸுக்கு சில நிதி நெருக்கடி ஏற்பட கொஞ்ச நாள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் ஜீவன் திருட்டுப் பயலே மற்றும் நான் அவனில்லை படங்களில் நடித்து ஒரு வெற்றி நாயகனாக மாறியிருந்தார். தோட்டா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது தயாரிப்பாளரிடம் ஜீவன் 2 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸ் போட்டியாளருக்கு ‘அடித்த’ அதிர்ஷ்டம்… என்னன்னு நீங்களே பாருங்க!

ஆனால் படத்தின் அக்ரிமெண்டில் லட்சங்களில்தான் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு படங்கள் ஹிட்டானதால் 2 கோடி கேட்டுள்ளார். இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கம் வரை செல்ல இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டு படப்பிடிப்பிற்கு அனுப்பியுள்ளது. ஆனால் அதன் பிறகு ஜீவனின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது.

எனர்ஜி டிரிங்: எனர்ஜியை ஏத்த ஒரு நாளைக்கு 10 ரெட் புல் கேட்டாராம். ஒரு நாளைக்கு 400ml அல்லது 600ml குடிப்பதே அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஆனால் இவர் 10 ரெட் புல் பாட்டில்களை கேட்டு டார்ச்சர் செய்தார். அதுமட்டுமில்லாமல் அவர் சொல்லும் ஹோட்டல்களில் இருந்து தினமும் வான்கோழி பிரியாணி, காடை வறுவல் வந்தால்தான் கேரவனை விட்டே வெளியே வருவேன் என அடம்பிடிப்பாராம்.

இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தால்தான் கேரவனை விட்டு வெளியே வருவாராம். மேலும் தன் பேருக்கு முன் மிரட்டல் நாயகன் என்ற பட்டத்தை போடச் சொல்லி வற்புறுத்தினாராம். ஒரு சமயம் தோட்டா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது என்னதான் நடக்குதுனு பார்ப்போம் என ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாஸ்கரன் சென்றிருக்கிறார்.

ஜீவனின் தெனாவட்டு: அங்கு ஜீவன் அசால்ட்டாக சிகரெட்டை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாராம். இவரை பார்த்ததும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு தெனாவட்டாக மேலும் சிகரெட் பிடித்தாராம். உடனே ஆஸ்கார் பாஸ்கரன் ‘ரஜினியை முதன் முதலில் ஹீரோவாக்கியவன் நான். விஜயை வைத்து படங்களை எடுத்திருக்கிறேன், சிவக்குமாரை வைத்து எடுத்திருக்கிறேன். மகேந்திரன், பாலசந்தர் இவர்களுடன் சேர்ந்து பணிபுரிந்தவன்.’

thotta
thotta

இதையும் படிங்க: Sai Pallavi: அமரன் அதிரிபுதிரி ஹிட்… சம்பளத்தை ‘டபுளாக்கிய’ சாய் பல்லவி!..

‘இப்படி மரியாதை மிக்க நபர்களுடன் சேர்ந்து வேலை பார்த்தவன் நான். என்னை பார்த்தாலே பிடித்த சிகரெட்டை கீழே போடுபவர் ரஜினி. ஆனால் இன்றைய நடிகர்கள் அப்படி இல்லை. அதனால் மரியாதை இல்லாத இந்த தொழிலை நான் இனி கையில் எடுக்க மாட்டேன்’ என கூறி தோட்டா படத்திற்கு பிறகு ஆஸ்கார் மூவிஸ் பாஸ்கரன் படம் தயாரிப்பதையே நிறுத்திக் கொண்டாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.