என்னது? கமலுடன் அந்த படம் வெளிவர வாய்ப்பில்லையா? மேடை போட்டு சொன்னதெல்லாம் பொய்யா?
Actor Kamal: தமிழ் சினிமாவில் எப்பொழுது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு அதிர்ச்சியான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் புதிய புதிய தகவல் தொழில்நுட்பத்தாலும் சினிமாவில் பல பரிணாமங்கள் நடந்து கொண்டு வருகின்றன.
இந்த வகையில் கமலை பற்றிய ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. கமல் தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். விக்ரம் படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒத்த போஸ்டர்ல மொத்த சோலியும் முடிச்சிட்டீங்களே!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை இதுதானா!
மேலும் இந்தியன் 2 படம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
அந்தப் படம் முழுக்க துப்பாக்கி சண்டைகள் நிறைந்ததாக கிட்டத்தட்ட துணிவு படத்தில் வருவதை போன்று இருக்குமா என்னவென்று தெரியவில்லை. சமீபத்தில் கமலின் வீடியோ அந்த மாதிரி சந்தேகத்தை எழுப்பியது.
இதையும் படிங்க: மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..
துப்பாக்கி சுடுவது போன்ற பயிற்சியில் கமல் ஈடுபட்டிருந்த அந்த வீடியோ வைரலானது. ஆனால் இது எச்.வினோத் படத்திற்கான ஒரு பயிற்சிதான் என்று அந்த பதிவிலேயே போட்டிருந்தது. இந்தப் படத்திற்கு பிறகு கமல் மணிரத்தினம் இயக்கத்தில் இணைகிறார்.
இப்படி தொடர்ச்சியாக தனது கால்ஷீட்டை பிஸியாக வைத்திருக்கும் கமல் பா.ரஞ்சித்துடனும் ஒரு படம் பண்ணுவதாக தகவல் வெளியானது. ஏன்? விக்ரம் பட வெற்றியில் கூட பா.ரஞ்சித் அதை பகிரங்கமாக கூறினார்.
இதையும் படிங்க: இப்படியே போனா எல்லா படமும் ரெண்டு பார்ட்டுதான்!.. தயாரிப்பாளர்களை கதறவிடும் ஷங்கர்…
ஆனால் இப்போதைக்கு அவர்கள் இணைந்து படம் பண்ணுவது என்பது மிகக் குறைவு என பிரபல் சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.