கமல் நடித்த படத்தை பார்த்து ‘கருமம்’ என சொன்ன நடிகை! அட என்னடா இது படத்திற்கு வந்த சோதனை?
Actor Kamalhasan: தமிழ் திரையுலகில் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். 60 ஆண்டுகள் தன்னுடைய திரைப்பயணத்தில் இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் கமல் சினிமா மீது வைத்திருக்கும் உண்மையான அன்பை காட்டுவதாகவே இருக்கும். விதவிதமான கெட்டப்களை போட்டுக் கொண்டு சினிமாவிற்காக மெனக்கிடுவதில் கமலை விட வேறெந்த நடிகரும் இல்லை.
களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை முதல் படத்திலேயே வாங்கியவர். அதன் பின் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வானம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் கமல் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் விவகாரம்: எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பான்!.. விரக்தியில் பேசும் டி.இமான்..
அவர் தமிழில் முதன் முதலில் ஹீரோவாக நடித்தது அரங்கேற்றம் என்ற திரைப்படத்தில் தான். அதுதான் கமலின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. கே.பாலசந்தரால் ஹீரோவாக அறிமுகமானாலும் டி.கே.சண்முகத்திடம் இருந்து நடிப்பை கற்றதால் எந்த மேடைக்கு போனாலும் பாலசந்தரை விட சண்முகத்தை பற்றி கமல் அதிகமாகவே பேசி பெருமைப் பட்டுக் கொள்வார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்து உச்சம் பெற்ற நடிகராக கமல் திகழ்கிறார். இந்த நிலையில் ஒரு விருது விழாவுக்கு சென்ற கமலிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஒருவர் ‘ நீங்கள் அந்த காலகட்டத்தில் க்ளாசிக்கல் படங்களிலேயே நடித்திருக்கிறீர்கள். அதை மீண்டும் ஒளிபரப்பு செய்யனும் என்றால் எந்த படத்தை மறு ஒளிபரப்பு செய்வீர்கள்?’ என்ற கேள்வியை கேட்டார்.
இதையும் படிங்க: ஹேராம் படத்தில் நடந்ததும் மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்… கமலின் வாழ்க்கையையே மாத்திய இசைஞானி..!
அதற்கு கமல் எல்லா படங்களுமே க்ளாசிக்கல் இல்லை. என்னுடைய மகள் சுருதி சிறுவயதில் இருக்கும் போது சரிவர பேசமாட்டார். அவரை தூக்கிக் கொண்டு என்னுடைய ஒரு படத்தை பார்க்க சென்றேன். ஆனால் அது என்ன படம்? யார் தயாரிப்பாளர்? என்பதை எல்லாம் சொல்ல மாட்டேன். அதுவரை பேசாத சுருதி அந்தப் படத்தை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு கருமம் கருமம் என்று சொன்னார்.
நான் சொல்ல வேண்டியதை என் மகள் சொல்கிறாரே என்று வியப்புடன் பார்த்தேன். அதே போல் எல்லா படங்களும் க்ளாசிக்கலாக அமைவதில்லை என்று கமல் பதில் கூறினார்.
இதையும் படிங்க:உன்னால எங்க கண்ட்ரோல் போச்சி!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிடும் ஜான்வி கபூர்!..