கமல் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர்! அசால்டா நடிச்சு பேர் வாங்கிய சீரியல் நடிகர்

kamal
Actor Kamal: தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் கமல் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்து இந்திய சினிமாவிற்கே பேர் வாங்கிக் கொடுத்தவர். சினிமாவை பற்றி அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர் கமல். விதவிதமான கெட்டப்களை போட்டு ஒரு மகா நடிகன் என்ற பேருக்குச் சொந்தக்காரராகவும் மாறியவர்.
இந்த நிலையில் கமல் உட்பட முக்கிய பிரபலங்கள் நடித்து ஆசைப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் அபிஷேக் நடித்த ஒரு செய்திதான் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது. கோலங்கள் உட்பட சன் டிவியில் முக்கிய சீரியல்களாக அமைந்த பல சீரியல்களில் நடித்தவர் அபிஷேக்.
இதையும் படிங்க: விஜய்கிட்டயா துப்பாக்கி வாங்கின!.. எஸ்.கே.வுக்கு ஜெர்க் கொடுத்த அஜித்!.. இதான் விஷயம்!…
இவர் முதன் முதலில் மோகமுள் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். மோகமுள் திரைப்படம் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த படமாகும். இது பிரபல எழுத்தாளர் ஜானகிராமன் கைவண்ணத்தில் வெளியான ஒரு புதினமாகும்.
இந்த புதினம் தான் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதை இயக்கியவர் ஞான ராஜசேகரன். ஞான ராஜசேகரனும் இந்த படத்தின் மூலம்தான் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார். கர்நாடக இசை பின்னணி உள்ள கதை என்பதால் இந்த பாடலில் அமைந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

abishek
இதையும் படிங்க: பிரசாந்த் கோட்ல நடிச்சதுக்கு இதுதான் காரணம்… இப்பவாவது சொன்னங்களே!…
இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. படத்தில் அபிஷேக்குக்கு ஜோடியாக அர்ச்சனா என்ற நடிகை நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நெடுமுடி வேணு, விவேக், வெண்ணிறாடை மூர்த்தி உள்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் அபிஷேக்கின் நடிப்பை பார்த்து இசைஞானி இளையராஜா மலர் கொத்தை கொடுத்து அவருடைய வாழ்த்துக்களை கூறினாராம். இந்த புதினத்தின் வழியாக வெளியான திரைப்படத்தில் தான் கமல் உள்பட பல நடிகர்கள் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்களாம். அது தனக்கு கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அபிஷேக் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

moga
இதையும் படிங்க: கோட் படத்தில் வெங்கட்பிரபு வச்ச செம டிவிஸ்ட்!. ஆனா யாருக்குமே தெரியாம போச்சே!…