ரஜினியின் கிளாசிக் படத்தில் நடிக்கவிருந்த கமல்!.. அதுவும் அந்த வேடத்தில்!.. தெரியாம போச்சே!..
ரஜினிக்கும், கமலுக்கும் பெரிய ஒரு பிணைப்பு உண்டு. ரஜினி முதன் முதலில் அறி்முகமான அபூர்வ ராகங்கள் படத்தில் ஹீரோ கமல்தான். அது கிளிக் ஆகவே ரஜினி அடுத்து நடித்த மூன்று முடிச்சி படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அதன்பின் பதினாறு வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட பல படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தனர்.
எனவே, திரையுலகில் அது ஒரு வெற்றிக்கூட்டணியாகவே இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் இனிமேல் தனியாக நடிப்போம் என முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க துவங்கினார்கள். ரஜினி பைரவி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்.
இதையும் படிங்க: இந்தப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஷோபனாவா? எல்லாருக்கும் ஃபேவரைட்.. என்ன பாடல் தெரியுமா?
ரஜினி முரட்டுக்காளை ஹிட் கொடுத்தால், கமலோ சகலகலா வல்லன் என ஹிட் கொடுத்தார். இருவருக்குமான தொழிற்போட்டி என்பது இப்போது வரை தொடர்கிறது. கமல்ஹாசன் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டாலும் ரஜினி மக்களை கவர்ந்த ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இருந்தார். இதனால் வியாபாரம் என்பது கமல் படங்களை விட ரஜினி படங்களுக்கு அதிகமாகவே இருந்தது.
சினிமாவில் இருவருக்கும் போட்டியே தவிர நிஜ வாழ்வில் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது முள்ளும் மலரும். மகேந்திரன் இயக்கிய இந்த படத்தில் ஒரு புது ரஜினியை ரசிகர்கள் பார்த்தார்கள்.
இதையும் படிங்க: சமையல் பிசினஸுக்குள் இறங்கும் கோபி!… இனி யார் ஜெயிக்க போறாங்க கோபியா? பாக்கியாவா?
இந்த படத்தில் சரத்பாபுவின் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் கமல்தான். ஆனால், அந்த படத்தில் நடிப்பதற்கான கால்ஷிட் அவரிடம் இல்லை. எனவே, அவர் நடிக்கவில்லை. அதேநேரம், அந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் மற்றும் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ ஆகிய பாடலை படம்பிடிப்பதற்கு பட்ஜெட் இல்லை.
சொன்ன பட்ஜெட்டை தாண்டி செலவாகிவிட்டது. இதற்கெல்லாம் நான் பணம் தரமாட்டேன் என தயாரிப்பாளர் சொல்லிவிட அதற்கு பணம் கொடுத்து உதவியர் கமல்தான் என்பது பலருக்கும் தெரியாது.