Connect with us
kalaignar

Cinema History

மேடையிலேயே திட்டிய கலைஞர்!.. கோபத்தில் கார்த்திக் எடுத்த முடிவு!.. நடந்தது இதுதான்!…

எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த ராஜகுமாரி படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானவர்தான் கலைஞர் கருணாநிதி. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு கதை வசனம் எழுதினார். சிவாஜி ஹீரோவாக அறிமுகமான பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய வசனம் திரையுலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது.

பகுத்தறிவு கருத்துக்களை இவ்வளவு வீரியமாக சொல்ல முடியுமா என பலரும் வியந்து போனார்கள். அதன்பின் தொடர்ந்து பல படங்களுக்கும் கதை, வசனம் எழுதினார் கலைஞர். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட போதும் அவர் எழுதுவதை நிறுத்தவே இல்லை. அதிலும், சினிமாவுக்கு தொடர்ந்து கதை, வசனம் எழுதி வந்தார்.

இதையும் படிங்க: கேரவானுக்குள் வந்து சட்டையை கழட்டிய இயக்குனர்!.. உறைந்து போன காஜல் அகர்வால்!..

கடைசியாக இவர் எழுதிய பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர் படத்திற்காக. இந்த திரைப்படம் 2011ம் வருடம் வெளியானது. பாடலாசிரியர் விஜய் நடிப்பில் உருவான இளைஞன் என பல படங்களுக்கும் கதை, வசனம் எழுதி இருந்தார். கலைஞரின் எழுத்தில் 1989ம் வருடம் வெளியான திரைப்படம்தான் நியாய தாராசு.

இந்த படத்தில் நிழல்கள் ரவி, ராதா, ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை கே.ராஜேஸ்வர் இயக்கி இருந்தார். ஒரு மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக முதலில் நடிக்கவிருந்தவர் நடிகர் கார்த்திக்தான். இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்ற போது மேடையில் ஆங்கிலத்தில் பேசினார் கார்த்திக்.

இதையும் படிங்க: தரலோக்கலா உருவாகும் தக்லைப்!.. வேறலெவல் வெறித்தனம் காட்டும் மணிரத்னம்!.. என்னப்பா சொல்றீங்க!..

அதன்பின் பேசிய கலைஞர் கேரளாவை சேர்ந்த ராதா தமிழில் பேசினார். ரகுவரனும் தமிழில் பேசினார். ஆனால், நமது முத்துராமனின் மகன் கார்த்திக் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார் என சொல்ல கார்த்திக்கு கோபம் வந்துவிட்டது. வீட்டுக்கு போனதும் தயாரிப்பாளருக்கு போன் செய்து இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என சொல்லிவிட்டார்.

தயாரிப்பாளர் அவரை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. அதன்பின்னரே நிழல்கள் ரவியை ஒப்பந்தம் செய்து இப்படத்தில் நடிக்க வைத்தனர். \

google news
Continue Reading

More in Cinema History

To Top