அந்த நேரத்தில் கார்த்திக்கு உதவிய நடிகர்!.. நன்றி மறக்காமல் நவரச நாயகன் செய்த அந்த சம்பவம்!…

Published on: September 24, 2023
karthik
---Advertisement---

Actor karthik: அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் இவர். முதல் படமே சூப்பர் ஹிட். ‘அட பையன் பாக்க அழகா இருக்காரே’ என பல இயக்குனர்களும் இவரை வைத்து படமெடுத்தனர்.

80,90களில் பல திரைப்டங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். பெரும்பாலும் காதல் கதைகளில் நடிப்பார். எந்த விதமான சூழ்நிலை என்றாலும் முகபாவனைகளை அழகாக காட்டுவார். எனவே, இவருக்கு நவரச நாயகன் என்கிற பட்டமும் கிடைத்தது. இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் இருந்தனர்.

இதையும் படிங்க: அவரால் தான் எனக்கு இந்த கொடுமை… அவர் சந்தோஷமா தான் இருந்தார்.. தந்தையை வறுத்தெடுக்க கௌதம் கார்த்திக்!

ஏனெனில் அழகாக இருப்பார்.. துறுதுறுவென நடிப்பார்.. வித்தியாசமான உடல்மொழி என பெண் ரசிகைகளை கவர்ந்தவர் இவர். மௌன ராகம் படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை யாரலும் மறக்க முடியாது. கொஞ்சமும் தயங்காமல் கதாநாயகியிடம் சென்று கண்ணுக்கு நேராக பார்த்து அவளிடம் மனதில் பட்டதை பேசும், எதற்கும் பயப்படாத, எதற்கும் அலட்டிக்கொள்ளாத கதாபாத்திரத்தை கார்த்திக் கச்சிதமாக செய்திருந்தார்.

இப்போதுவரை பல நடிகர்கள் அதைத்தான் பின்பற்றி வருகிறார்கள். கிழக்கு வாசல், அக்னி நட்சத்திரம், அமரன், பொன்னுமனி, உள்ளத்தை அள்ளித்தா என நடிப்பில் பல வெரைட்டிகளை காட்டியவர் கார்த்திக். படப்பிடிப்புக்கு சரியாக போகாமல் மார்க்கெட்டை கெடுத்து கொண்டார். அந்த கேப்பில்தான் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் உள்ளே நுழைந்தனர். இல்லையெனில் இப்போதுவரை கார்த்திக் சினிமாவில் அசத்திக்கொண்டிருப்பார். தற்போது அவரின் மகன் கௌதம் கார்த்தி சினிமாவில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்துடன் நடிக்க மறுத்த கார்த்திக்!.. அவருக்கு பதில் நடித்த பிரபல ஹீரோ!..

கார்த்திக் முதலில் ரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் அவரின் தங்கை ராகிணியை 2வது திருமணம் செய்து கொண்டார். எனவே, கார்த்திக் தாய் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மனைவியுடன் வீட்டுக்கு போன கார்த்திக்கை அவரின் குடும்பத்தினர் வீட்டில் நுழைய கூட விடவில்லை.

karthik

அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் நடிகர் அருண் பாண்டியன். அவர் தங்கியிருந்த வீட்டில் சில மாதங்கள் கார்த்திக்கை ராகிணியுடன் தங்க வைத்தார். பல வருடங்கள் கழித்து அருண்பாண்டியன் தேவன் என்கிற திரைப்படத்தை தயாரித்து, இயக்கினார். இப்படத்தில் கார்த்திக்கையும் நடிக்க வைத்தார். இப்படத்தில் நடித்ததற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செக்கில் எழுது கார்த்திக் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இதைப்பார்த்து கோபமடைந்த கார்த்திக் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அருண்பாண்டியனை கடுமையாக திட்டினாராம். நீ எனக்கு செய்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். நீ எனக்கு பணம் கொடுக்கலாமா?.. நம் நட்பு அவ்வளவுதானா?..’ என சொல்லி அந்த செக்கை அருண் பாண்டியனுக்கே திருப்பி அனுப்பிவிட்டாராம். இந்த அருண்பாண்டியன் மகள் கீர்த்தியைத்தான் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குடியால் குடி மூழ்கி போன கார்த்திக் படம்- உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்!!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.