கனா பட இயக்குனரை காவு வாங்கிய கார்த்தி.. மனசாட்சியே இல்லையா?!. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..

பருத்தி வீரன் மூலம் அறிமுகமான கார்த்தி அதன்பின் 25 படங்கள் நடித்துவிட்டார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் இவர். இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்தார். ஆனால், அமீர் இவரை நடிகராக மாற்றினார். இப்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள் ஒரு 10 பேர்தான் இருப்பார்கள். எனவே, அறிமுக இயக்குனர்கள் முதல் பெரிய இயக்குனர்கள் வரை இவர்களிடம்தான் வர வேண்டும். ஏனெனில் அவர்களை சுற்றித்தான் சினிமா வியாபாரமே இருக்கிறது. மக்களுக்கு நன்கு தெரிந்த நடிகர் நடித்தால்தான் படமும் வியாபாரம் ஆகும். ரசிகர்களும் தியேட்டருக்கு வருவார்கள்.

இதையும் படிங்க: சங்கீதாவுக்கு முன்னாடியே விஜய் வாழ்க்கையில் தென்றலாய் வீசிய பெண்! உயிர்த்தோழன் பகிர்ந்த சீக்ரெட்

ஒருபக்கம், ஒரு ஹிட் படம் கொடுத்த இயக்குனரை ‘வாங்க நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என அழைத்து வந்து வருடக்கணக்கில் அவர்களை காக்க வைத்து காலி பண்ணுவதை இந்த பெரிய நடிகர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ரஜினி, கமல், கார்த்தி, தனுஷ் என எல்லோருமே இதை செய்து வருகிறார்கள்.

தேசிங்கு பெரியசாமி ரஜினியை நம்பி பல மாதங்கள் காத்திருந்தார். அதன்பின் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் திருப்பி அனுப்பினார் ரஜினி. இப்போது சிம்புவை வைத்து படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. ஹெச்.வினோத்தை ஒரு வருடம் காத்திருக்க வைத்துவிட்டு மணிரத்னம் படத்தில் நடிக்க போய்விட்டார் கமல். இப்போது அவர் தனுஷை வைத்து படமெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: எல்லா கூட்டமும் ஒரே இடம் தானா? பாக்கியாவுக்கு இருக்க சோதனை போதாதா? முடியல…

கனா படத்தை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். பாடலாசிரியர், பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை உடையவர இவர். கனா படம் வெளிவந்த பின் கார்த்தியை வைத்து இவரு ஒரு படம் இயக்குவதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனத்திடம் கதை சொன்னார். அதில் பல மாறுதல்கள சொல்ல அது எல்லாவற்றையும் செய்தார் அருண்ராஜா. கார்த்தியோ வெவ்வேறு படங்களில் நடித்து கொண்டே இருந்தார். இப்படியே 5 வருடம் போய்விட்டது. இதில் சோகம் என்னவெனில் இந்த 5 வருடத்தில் கார்த்தியை அவர் சந்தித்தது ஒரே ஒரு முறைதான்.

இதற்கு இடையில் உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி ஒரு படத்தை இயக்கினார். மேலும், லேபிள் எனும் வெப் சீரியஸ் ஒன்றயும் இயக்கினார். இவரை போன்ற நல்ல இயக்குனர்களை இப்படி பெரிய நடிகர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வைத்து காலி செய்வதை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: ரஜினியோடு நேரடியாக போட்டி போட்ட பாக்கியராஜ் படங்கள்… அட இந்த படமும் லிஸ்ட்ல இருக்கா!…

 

Related Articles

Next Story